பலாப்பழம் சாப்பிட்ட உடனே தப்பித் தவறி இதை மட்டும் சாப்பிடாதீங்க.... உயிருக்கு ஆபத்து?
பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருசில உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
ஒருவேளை சாப்பிட்டால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இப்போது பலாப்பழம் சாப்பிட்டதும் எந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
பால்
பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் ஆரோக்கியத்திற்கே ஆபத்தாகிவிடும். படர்தாமரை, சிரங்கு, அரிப்பு, அரிக்கும் தோலழற்சி, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தேன்
பலாப்பழம் சாப்பிட்டதும் தேன் சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை இருமடங்கு அதிகரித்துவிடும். நீரிழிவு நோயாளிகளின் நிலமை மிகவும் மோசமாகிவிடும். அதனால் தொடக் கூட வேண்டாம்.
பப்பாளி
பலாப்பழம் சூடான பண்பைக் கொண்டது. பப்பாளியும் சூடான பண்பைக் கொண்டது. எனவே இப்படி சூடான பண்புகளைக் கொண்ட இரண்டு பழங்களை ஒன்றாகவோ அல்லது அடுத்தடுத்தோ சாப்பிடக்கூடாது.
வெற்றிலை
பலாக்காயை சமைத்து சாப்பிட்ட பின்னர் அல்லது பலாப்பழத்தை சாப்பிட்ட பின்னர் வெற்றிலை சாப்பிட்டால், அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.