உங்களது இதயம் ஆரோக்கியமாக இருக்கின்றதா? ஆபத்தில் இருந்தால் இதுதான் அறிகுறிகள்
வீட்டில் இருந்தபடியே நமது இதயம் ஆரோக்கியமாக உள்ளதா? என்பதை சில செயல்களை வைத்து தெரிந்து கொள்ள முடியும். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இதயம்
ஒரு மனிதரின் உயிர் ரத்தத்தில் இருக்கின்றது என்றாலும் அந்த ரத்தத்தினை அனைத்து இடங்களுக்கு சரியான முறையில் கொண்டு செல்வது இதயம் ஆகும்.
இதயம் இல்லையென்றால் ரத்த ஓட்டம் இல்லை. இதயம் நின்றுவிட்டால் ஒரு மனிதன் மரணிக்கும் நிலை ஏற்படுகின்றது. ஆனால் தற்போது வரும் மாரடைப்புகள் சட்டென இதயத்தை நிறுத்திவிடுகின்றது.
இதுகுறித்து விழிப்புணர்வு உள்ளவர்கள் சிபிஆர் என்ற உயிர்காக்கும் முதலுதவியை செய்து மீண்டும் இதயத்தை செயல்படுத்த வைத்துவிடுகின்றனர்.

பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான சிகிச்சைகள், மருந்துகள் கொடுக்கப்படுகின்றது. அவ்வாறு எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்கின்றதா? என்றால் பலரும் யோசிப்பார்கள்.
ஏனெனில் இதனை அவ்வளவாக கருத்தில் கொள்ளவது கிடையாது. ஆனால் சமீப காலங்களில் மாரடைப்பினால் ஏற்படும் மரணம் ஒவ்வொரு மனிதரையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது நாம் வீட்டில் இருந்தவாறு நமது இதயம் ஆரோக்கியமாக இருக்கின்றதா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியமான இதயம்
பொதுவாக இதய துடிப்பு 60-80bpm இருந்தது என்றால் சிறந்த முறையில் இதயம் இயங்குகின்றது. மேலும் எந்தவொரு சிரமம் இல்லாமல் ரத்தத்தினை பம்ப் செய்வதாக அர்த்தம். உங்களது இரண்டு வரல்களை மணிக்கட்டில் அல்லது காதின் அருகில் வைத்து 30 நொடியில் எவ்வளவு துடிக்கின்றது என்பதை பார்த்து அதனை இரண்டால் பெருக்கிக் கொள்ள வேண்டும். இதயத்துடிப்பு 80க்கு மேல் அல்லது 60க்கு கீழ் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

இதே போன்று உங்களது ரத்த அழுத்தம் 120/80 mmHg இருந்தால் இதயம் ஆரோக்கியமாக உள்ளது. அதுவே அளவுக்கு மேல் இருந்தால், இவை ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தி மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அபாயத்தினையும் ஏற்படுத்துகின்றது. ஆகவே டிஜிட்டல் மானிட்டர் கொண்டு பரிசோதித்து கொள்ளவது நல்லது.
மாடிப்படிகள் ஏறும் போது மூச்சுவிடுவதற்கு சிரமமாக இல்லாமலும், இதயப்பகுதியில் இறுக்கம் இல்லாமல் இருந்தாலோ, அதிக சோர் உண்டாகாமல் இருக்கிறீர்கள் என்றால், உங்களது ரத்த ஓட்டம் சீராக இருப்பதாக தெரிந்து கொள்ளலாம். அதே போன்று தசைகள் அனைத்திற்கும் ஆக்ஸிஜன் குறையாமல் சரியாக இருப்பதையும் காட்டுகின்றது. மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுப்பகுதியில் அழுத்தம் காணப்படால் மருத்துவரிடம் செல்லவும்.

அனைத்து உறுப்புகளுக்கும் குறைவு இல்லாமல் இரத்தத்தினை பம்ப் செய்து அனுப்பினால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். பாதம், கணுக்கால் இவற்றில் நீர்க் கோர்த்து வீக்கம் போன்றவைக் காணப்பட்டால், மருத்துவரை உடனே பார்க்கவும்.
தூங்கும் போதும், தூங்கி எழும் போதும் மூச்சுவிடுவதில் சிரமம் அல்லது சத்தமாக குறட்டை விடுவது போன்ற பிரச்சனை காணப்பட்டால், இதய ஆரோக்கியத்தில் குறையிருப்பதாக அர்த்தம். ஆகவே இடையூறு இல்லாமல் ஆழ்ந்த தூக்கத்தை பெற இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |