யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
பொதுவாக யாழ்ப்பாணம் போனால் புட்டு அங்கு பிரபலமான உணவுகளில் ஒன்று.
இலங்கை- யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களும் மூன்று வேளை புட்டுக் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்.
அந்தளவு அடிமைகளாக்கி வைத்திருக்கிறது. மீன் குழம்பு, மட்டன் குழம்பு, இறால் குழம்பு என அசைவ குழம்புகளை புட்டுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். அவர்களின் வீட்டிற்கு வருபவர்களுக்கும் புட்டு தான் கொடுப்பார்கள்.
அந்த வகையில், யாழ்ப்பாணத்து சுவையில் இறால் புட்டு மசாலா எப்படி செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- இறால்- 1/2 கிலோ
- வெங்காயம்
- சோம்பு
- தக்காளி
- கடுகு
- எண்ணெய்
- மிளகாய்த்தூள்
- கறித்தூள்
- மஞ்சள்
- உப்பு
- புட்டு மா
- தேங்காய் பூ
வெங்காயம் பேஸ்ட்
- வெங்காயம்
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
இறால் புட்டு மசாலா செய்முறை
முதலில் புட்டு செய்ய தேவையான இறாலை நன்றாக கழுவி, ஒரு ஓரமாக வைத்து விட்டு, அதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு போடவும்.

அதன் பின்னர், வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதங்க விடவும். அதனுடன் மிளகாய்த்தூள், கறித்தூள் இரண்டையும் போட்டு நன்றாக வதக்கவும்.
வதங்கிய வெங்காயத்துடன், இறாலை போட்டு, எண்ணெய்யில் கொஞ்சமாக வதங்கி எடுக்கவும். மூடிப்போட்டு ஒரு 5 நிமிடங்கள் வேக வைத்த பின்னர், வெங்காயம் பேஸ்ட் கொஞ்சமாக சேர்த்து, நன்றாக கலந்து விடவும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகிய பொருட்களை கொஞ்சமாக எண்ணெய் விட்டு வதக்கி, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். அப்படியே 5 நிமிடம் விட்டால் இறால் தொக்கு தயாராகி விடும். அடுத்து, ஒரு பெரிய பவுலில், புட்டு செய்ய தேவையான அளவு மா எடுத்து, கொஞ்சமாக உப்பு, தண்ணீர் புட்டு பதத்திற்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
கடைசியாக புட்டு வைக்கும் பாத்திரத்தில் புட்டு, கொஞ்சமாக தேங்காய் பூ, இறால் தொக்கு இப்படியே அடுக்குகளாக வைத்து அவித்து எடுத்தால் யாழ்ப்பாணத்து சுவையில் இறால் புட்டு மசாலா தயார்!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |