அடிக்கடி தூக்க மாத்திரை எடுத்துக் கொள்பவருக்கு இந்த நோய் கண்டிப்பாக வருமாம்.. ஜாக்கிரதை!
பகல் நேரங்களில் கடுமையான மன அழுத்தத்துடன் பணியாற்றி விட்டு இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள், இரவில் நிம்மதியாக தூங்குவதற்காக தூக்க மாத்திரைகளை சாப்பிடுவார்கள்.
இது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல என்றாலும் ஒரு சில மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இப்படி அடிக்கடி தூக்க மாத்திரைகள் எடுத்து கொள்ளும் ஒருவருக்கு வீரியம் குறைய குறைய அதன் அளவில் மாற்றம் ஏற்படும். இதனால் உடம்பில் வேறு சில கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில் அடிக்கடி தூக்கம் மாத்திரை எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு என்னென்ன ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தூக்கம் மாத்திரையால் வரும் விளைவுகள்
1. தூக்கம் வரவில்லை என கஷ்டம் அனுபவிக்கும் ஒருவர் அடிக்கடி தூக்க மாத்திரை எடுத்து கொள்ளும் பொழுது அவருக்கு மாத்திரையை நிறுத்தினால் தூக்கம் பாதிக்கப்படும்.
2. அதிக காலம் தூக்க மாத்திரை எடுத்து கொண்டால் ஞாபக மறதி பிரச்சினை ஏற்படும். பகல் வேளைகளில் மயக்கம், பேச்சில் தடுமாற்றம், மன குழப்பம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். முடிந்தளவு அளவான தூக்க மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும்.
3. தூக்கம் மாத்திரை எடுத்து கொள்வது அவசியம் தேவை என வரும் பொழுது உரிய மருத்துவரிடம் ஆலோசனை எடுத்து கொள்ள வேண்டும்.
4. எவ்வளவு வேலை இருந்தாலும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். முடிந்தவரை 8 மணி நேரம் தூங்க முயற்சிக்க வேண்டும். சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரம் உங்களின் வழக்கமான வேலைகளை பார்க்கலாம். தூங்க ஆரம்பிக்கும் பொழுது குளிக்க வேண்டிய சூழல் இருந்தால், சுமாராக 3 மணி நேரத்திற்கு முன்னரே குளித்து விட வேண்டும்.
5. இரவில் கொழுப்பு மிகுந்த உணவை தவிர்க்க வேண்டும். உதாரணமாக, காபி, தேநீர், மது, கோலா பானங்கள் ஆகியவற்றை அருந்தக் கூடாது. சாக்லேட் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் இரவு வேளைகளில் தவிர்க்க வேண்டும். பால் மற்றும் பழங்கள் சாப்பிடலாம். இது உங்களின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
6. தினமும் காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்யலாம். உடற்பயிற்சிகள் இரவில் செய்வதை தவிர்க்க வேண்டும். அத்துடன் பகலில் அதிகபட்சம் 45 நிமிடம் குட்டித் தூக்கம் போடலாம்.
7. எப்போதும் உங்களின் படுக்கையறையை காற்றோட்டமாக வைத்து கொள்ள வேண்டும். வெளிச்சம் அதிகமாக இருக்காமல், சத்தம் இருக்காமல் இருப்பது முக்கியம். உங்களின் படுக்கையறையை அப்படி அமைத்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |