தண்ணீர் குடிப்பதற்கு காப்பர் பாட்டில் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கை பதிவு இதோ
காப்பர் பாட்டிலை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கான எச்சரிக்கை பதிவு இதுவாகும்.
காப்பர் பாட்டில் தீங்கா?
ஆயுர்வேதத்தில் தாமிர பாட்டிலில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியம் என்று கூறப்படுகின்றது. ஆனால் இதனை சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனில் உடம்பிற்கு தீங்கு ஏற்படுமாம்.
தற்போது அதிகமான நபர்களுக்கு தாமிர பாட்டிலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றது. தாமிர பாட்டிலை சரியான முறையில் எவ்வாறு பயன்படுத்தக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
காப்பர் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி ஃபிரிட்ஜில் வைப்பது தவறாகும். அவ்வாறு ப்ரிட்ஜில் வைத்து குடிப்பதால் எந்தவொரு பயனும் கிடையாது. சாதாரண அறை வெப்பநிலையில், 6 முதல் 8 மணி நேரம் வைத்து குடிக்க வேண்டும். அதுவே உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
காப்பர் பாட்டிலை பாத்திரம் கழுவும் சோப்பு போட்டு கழுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் காப்பர் தேய்ந்து போவதுடன் உடம்பிற்கு கெடுதலையும் ஏற்படுத்தும். ஆதலால் மண் அல்லது சாப்பலைக் கொண்டு தேய்கலாம். அல்லது சாதாரண தண்ணீரை கொண்டு கழுவி துடைத்தால் போதுமானதாகும்.
காப்பர் பாட்டிலில் சுடு தண்ணீரை ஊற்றி பருகுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சுடுதண்ணீர் ஊற்றி மெட்டல் தண்ணீர் கலந்து, அதனை அருந்தும் போது உடம்பில் காப்பர் அளவு அதிகரித்துவிடும்.
மேலும் இதனால் ஜீரண சக்தி சரியில்லாமல் போவதுடன், உடம்பில் நச்சுத்தன்மையை அதிகரிக்கின்றது. ஆகையால் எப்பொழுதும் சாதாரண தண்ணீர் ஊற்றி பயன்படுத்தலாம்.
காப்பர் பாட்டில் தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்தினால் காப்பர் அளவு அதிகமாகி காப்பர் டாக்சிசிட்டி (Copper Toxicity) வரலாம். இதனால் வயிறு வலி, வாந்தி, குமட்டல், தலைவலி, சிறுநீரக பிரச்சனை ஏற்படும்.
ஆதலால் 2 அல்லது 3 மாதம் பயன்படுத்திவிட்டு ஒரு மாதம் நிறுத்திக் கொள்ள வேண்டுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |