மாத்திரை சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீங்க... தண்ணீர் எவ்வளவு எடுத்துக்கனும்?
மாத்திரை சாப்பிடும் போது தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக உடலில் எதாவது பிரச்சனை ஏற்பட்டுவிட்டால், அதற்கு மருந்து மாத்திரைகளை தான் முதலில் எடுத்துக் கொள்வோம். ஒருசிலர் அதிகமாக தண்ணீர் குடித்து மாத்திரை போடுவார்கள்... வேறு சிலர் தண்ணீர் பருகாமலே மாத்திரைகளை போடுவார்கள்.
ஆனால் இவை இரண்டுமே தவறான செயல் ஆகும். நாம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மருந்தின் அளவு அதிகமாக இருந்தால் தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். குறைந்த பட்சம் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
மாத்திரை போடும் போது தண்ணீர் குடிக்காமல் இருந்தால் செரிமான பிரச்சனை ஏற்படுவதுடன், அல்சர் போன்ற நோய்களின் தாக்கம் ஏற்படும். ஆதலால் தண்ணீர் குடிக்காமல் மாத்திரை போடுவதை தவிர்க்கவும்.
ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய விடயம்
மாத்திரை எடுத்துக் கொள்வோது சூடான நீரை குடிப்பது நல்லதாகும். ஏனெனில் மாத்திரை விரைவில் கரைந்துவிடும்.
மாத்திரை போட்ட உடனே தூங்கும் பழக்கம் இருந்தால் நிறுத்திக் கொள்ளவும். அதாவது மாத்திரை போட்டு அரை மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும். அப்பொழுது தான் மாத்திரை உடலில் வேகமாக சென்றடையும்.
Tassii / Getty images
மேலும் மாத்திரை சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து தான் உணவை சாப்பிட வேண்டும். உணவுக்கு முன்பாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டுமானால் அரமாணி நேரத்திற்கு முன்பாகவே மருந்து சாப்பிடுங்கள்.
முக்கியமாக மாத்திரையை பால் ஜூஸ் போன்றவற்றுடன் ஒருபோதும் சாப்பிட வேண்டாம். இவ்வாறு செய்தால் மாத்திரையானது கரைவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |