ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயிர் குழம்பு: இப்படி செய்தால் சுவை அள்ளும்
வீட்டில் குழம்பு என்றால் அது அசைவத்தில் தான் செய்வார்கள். அதில் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு என்பவை சிறப்பு வாய்ந்தவை. இந்த அசைவ குழம்புகள் தோற்றுப்போகும் அளவிற்கு முளைப்பயறு குழம்பு செய்யலாம்.
முளைப்பயிர் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை தினமும் சாப்பிட்டால் கூட எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது இந்த முளைப்பயிர் கட்டாயம் கொடுப்பது அவசியம்.
இது அதிகளவான ஞாபக சக்தியை கொடுக்கும். முளைப்பயிர் வைத்து அசைவ குழம்புகளே தோற்றுப்போகும் அளவிற்கு எப்படி குழம்பு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முளைப்பயிர் குழம்புக்கு தேவையான பொருட்கள்
- முளைப்பயிர் - 2 கப்
- வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- சீரகம் - ½ ஸ்பூன்
- கொத்தமல்லி பொடி - 1 ஸ்பூன்
- கரம் மசாலா - ½ ஸ்பூன்
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்யும் முறை
முதலில், 2 கப் முளைக்கட்டிய பயிரினை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யவும். பின்னர் இதனை ஒரு சமைக்கும் பாத்திரத்தில் போட்டு 2.5 கப் தண்ணீருடன் சேர்த்து, நன்றாக அவித்து தனியேஎடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தயார் செய்த்துக் கொள்ளவும். பின்னர் குழம்புக்கு தேவையான மற்றைய பொருட்களையும் தயார் செய்து கொள்ளவும்.
தற்போது குழம்பு செய்ய, பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். அந்த எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
இதனை 10 - 15 நிமிடத்திற்குள் முதல் கொதி வந்துவிட்டதும் குழம்பின் மீது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும் இப்போது சுவையான முளைப்பயிர் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |