உச்சந்தலையில் அங்கங்க சொட்டை இருக்கா? அப்ப 'இந்த' டிப்ஸ் உங்களுக்கே
தலைமுடி பயங்கரமாக கொட்டி கொண்டிருக்கின்றதா? அப்போது கண்டிப்பாக காலப்போக்கில் தலை சொட்டையாகி விடும்.
பொதுவாக ஒருவரின் மேல் தோற்ற அழகில் தலைமுடி முக்கிய பங்காற்றுகின்றது. இதனால் வயது இருக்கும் வரை தலைமுடியை சீராக வைத்து கொள்ள வேண்டும்.
மாறாக தலைமுடியை இடுப்பு வரை வளர்த்து கொள்ள வேண்டும் என பெண்கள் நினைப்பார்கள். ஆனால் இது எத்தனை வருடங்கள் ஆனாலும் நடக்காது.
இதற்கான முக்கிய காரணம் இந்த தலைமுடி உதிர்வு தான். வளர்கின்ற தலைமுடியெல்லாம் காலங்கள் செல்ல செல்ல உதிர்ந்து விட்டால் அப்போது எப்படி தலைமுடி நீளமாகும்.
அந்த வகையில் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஒரு ஹோம் ரெமடியை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
கற்றாழை
தலைமுடி பிரச்சினையுள்ளவர்கள் நன்றாக தலையில் கற்றாழை ஜெல்லை நேரடியாக அப்ளை செய்து விட்டு சரியாக 30 நிமிடங்களுக்கு பின்னர் தலையை நன்றாக குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்தால் தலைமுடி உதிர்வு காலப்போக்கில் கட்டுக்குள் வந்து விடும்.
வெங்காயச் சாறு
வெங்காயத்திலிருந்து சாற்றை மாத்திரம் தனியாக பிரித்தெடுத்து குளிப்பதற்கு முன்னர் தலையில் அப்ளை செய்து விட்டு சரியாக 15 - 30 நிமிடங்கள் வரை தலையை சாற்றினால் ஊற விட வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு தடவைகள் செய்ய வேண்டும். இந்த முறையால் தலையில் இருக்கும் முடிகளுக்கு நார் வரை சாறு சென்று தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றது.
முக்கிய குறிப்பு
மேற்குறிப்பிட்ட குறிப்புகள் எல்லாம் ஆய்வுகள் ரீதியாக நிருபணம் செய்யப்பட்டவையாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |