அஜீரண பிரச்சனை அதிகமா இருக்கா? வாழைப்பூ சட்னி செய்து சாப்பிடுங்க!
வாழைப்பூ சமைப்பதற்காக பயன்படும் உரு காய்கறி வகைகளில் ஒன்றாகும். இது உடலில் பல நோய்களுக்குமருந்தாக இருக்கிறது. இந்த வாழைப்பூவை சாப்பிட விரு்பம் இல்லாதவர்கள் இன்று கொடக்கப்பட்டிருக்கும் இந்த ரெசிபில்செய்து உணவிற்கு சேர்த்து கொள்ள முடியும்.
இப்படி செய்வதால் அஜீரண பிரச்சனை இருக்காது. உடலில் நல்ல சக்தி கிடைக்கும். குடல் பகுதிகள் நச்சுக்கள் இன்றி சுத்தமாக்கப்படும். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1 வாழைப்பூ
- 5 வத்தல்
- 100 கிராம் சின்ன வெங்காயம்
- 2 ஸ்பூன் உளுந்து
- 2 ஸ்பூன் கடலை பருப்பு
- 15 பல் பூண்டு
- 1 நெல்லிக்காய் அளவு புளி
- 1 ஸ்பூன் மல்லி
- அரை ஸ்பூன் சீரகம்
- 2 ஸ்பூன் கடலை எண்ணெய்
- உப்பு
செய்முறை
வாழைப்பூவின் நாரை நீக்கி அதை வெட்டி தண்ணீரில் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, வத்தல், மல்லி, சீரகம் சேர்த்து நன்றாக கிளர வேண்டும்.
நிறம் மாறும் வரை வதக்கவும். இதை தனியாக எடுத்து வத்து கொள்ளவும். தொடர்ந்து மேலும் எண்ணெய் சேர்த்து வாழைப்பூ சேர்த்து கிளரவும். பாதி வெந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து கிளரவும்.
தொடர்ந்து இவை அனைத்தையும், உப்பு, புளி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். பின்னர் இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து பிடித்த உணவுடன் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |