onion chutney: புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் வெங்காய சட்னி
வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் செறிந்து காணப்படுகின்றன. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு எனும் வேதிப்பொருள் தான் வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம்.
இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணமாக இருக்கின்றது.
வெங்காயத்தில் பல்வேறு கந்தக கலவைகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றன.
க்வெர்செடின், ஃபிளாவனாய்டுகள் மற்றும் அல்லிசின் போன்ற சேர்மங்கள் புற்று நோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன, அவை உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றனர்.
கூந்தல் வளர்ச்சி முதல் செரிமான பிரச்சினைகள் வரையில், தீர்வு கொடுக்கும் வெங்காயத்தை கொண்டு எவ்வாறு நாவூரும் சுவையில் அருமையான சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தே.கரண்டி
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - 1கொத்து
பெருங்காயத் தூள் - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பை சேர்த்து நிறம் மாறும் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, வெங்காயம் பொன்நிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தக்காளி, பூண்டு பற்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, அதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.
அவை ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து, நன்றாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் வெங்காய சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |