எண்ணெய் குடிக்காத மொறு மொறு காலிபிளவர் 65... ஹொட்டல் ஸ்டைலில் எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காலிஃப்ளவர் 65 எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
காலிஃப்ளவர் என்றால் பிடிக்காத நபரே கிடையாது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
விடுமுறை நாட்களில், மழை பெய்யும் நேரத்தில் இது முக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும். மேலும் கலவை சாதத்திற்கு இது அருமையான சைடிஷ் ஆகும். தற்போது ஹொட்டல் ஸ்டைல் காலிஃப்ளவர் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
காலிப்ளவர் - 1/2 கிலோ
மஞ்சள் - 1/2 ஸ்பூன்
மைதா - 1 1/2 ஸ்பூன்
சோள மாவு - 1 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கடலை மாவு - 1 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா- 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை நன்கு சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்பு பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து காலிஃப்ளவர், மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
தட்டில் தனியாக காலிஃப்ளவரை எடுத்து வைத்த பின்பு, அகலமான பாத்திரம் ஒன்றில் கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு, கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு இவற்றினை சேர்த்து கிளறவும்.
பின்பு இந்த கலவையுடன் காலிஃபிளவரை சேர்த்து நன்றாக கலந்து ஒரு 10 நிமிடம் மட்டும் ஊற வைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தற்போது சுவையான காலிஃப்ளவர் 65 தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |