தோசைக்கு ‛தோசை’ என்று பெயர் வந்தது எப்படினு தெரியுமா? சுவாரசிய கதை இதோ
பெரும்பாலான நபர்களின் காலை உணவாக இருக்கும் தோசைக்கு தோசை என்று ஏன் பெயர் வந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தோசை
தோசை என்பது முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் ஸ்பெஷலாக பரிமாறப்படும் உணவாக இருந்த நிலையில், தற்போது சாதாரண உணவாக மாறிவிட்டது.
பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு டிபன் தோசையாகவே இருக்கின்றது. இந்தியாவில் பல மனிதர்களின் காலை உணவே இதுவாகும்.
தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து கூட தனக்கு வேண்டிய தோசைகளை விதவிதமாக வாங்கி சாப்பிடுகின்றனர். தோசையில் பல வகைகள் உள்ளது.
சாதா தோசை, நெய் தோசை, மசாலா தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, முட்டை தோசை, செட் தோசை, வெண்ணெய் தோசை, பேப்பர் ரோஸ்ட், தக்காளி ரோஸ்ட், கறி தோசை, ரவா தோசை, நெய் ரவா ரோஸ்ட் என்று சொல்லிக்கொண்டே செல்லலாம்.
தென்னிந்திய உணவாக அடையாளம் காணப்படும் தோசைக்கு சொந்தம் கொண்டாடுவது தமிழ்நாடும், கர்நாடகாவும் தான். ஆனால் உண்மையில் தோசை கர்நாடகாவின் உடுப்பில் தான் வழக்கத்திற்கு வந்துள்ளதாம்.
தோசை என்று பெயர் வந்தது எப்படி?
தோசைக்கு, தோசை என பெயர் வந்தததன் பின்னணியில் பல கட்டுக்கதைகள் வலைதளங்களில் உள்ளன. அதில் ஒன்று மிகவும் வேடிக்கையானது. அதாவது, தோசைக்கல்லில் மாவை ஊற்றும்போது ‛சை' என்ற சத்தம் வரும்.
அதேபோல் தோசையை திருப்பி போடும்போதும் மீண்டும் ‛சை' என்ற சத்தம் வரும். இப்படி 2 முறை ‛சை' என்ற சத்தம் வருவதால் ‛தோசை' (தோ என்பது ஹிந்தியில் நம்பர் 2யை குறிக்கும்) என்கின்றனர்.
ஆனால் உண்மை காரணம் என்னவெனில், குறிப்பாக சொல்லாராட்சியின் வல்லுனர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தோசையின் பெயர் காரணத்தை கூறியுள்ளார். தமிழ் மொழியை எளிமைப்படுத்தியதில் இவருக்கு சிறந்த பங்கு உள்ளது. இந்நிலையில் தான் தேவநேயப் பாவாணர் தோசை பற்றியும் பேசியுள்ளார்.
அதாவது தோய் + செய் = தோய்செய் என்பது தான் காலப்போக்கில் மருவி தோசை என்றாகிவிட்டது என்கிறார் அவர். ஏனென்றால் ‛தோய்' என்றால் புளித்த மாவை தோசைக்கல்லில் ஊற்றி தேய்த்து எடுப்பதை குறிக்கும்.
இப்படி தோய்த்து செய்யும் இந்த உணவு என்பதால் தோய் + செய் என்பது மருவி காலப்போக்கில் தோசை என்றாகிவிட்டதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |