சர்க்கரை வியாதியுள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா?
பொதுவாக சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சர்க்கரை பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை பெரிதும் விரும்பமாட்டார்கள்.
இதனால் வெளியில் சென்றால் கூட உணவுகளில் சர்க்கரை கலந்துள்ளார்களா? என சுவைத்து பார்த்து தான் சாப்பிடுவார்கள்.
மேலும் சர்க்கரை வியாதியுள்ளவர்கள், சர்க்கரைக்கு மாற்றாக தேன், வெல்லம் போன்ற மாற்றுப் பொருட்களை தான் நாடுவார்கள்.
அந்த வகையில் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் தேனை மாற்றுப் பொருளாக தினமும் எடுத்து கொள்ளலாமா? என தொடர்ந்து பார்க்கலாம்.
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா?
பொதுவாக நாம் அதிகமாக சாப்பிடும் வெள்ளை சர்க்கரையுடன் தேனை ஒப்பிட்டு பார்க்கும் போது குளுக்கோஸை விட பிரக்டோஸ் அதிகம் உள்ளது.
மேலும் 1 தேக்கரண்டி தேனில் கார்போஹைட்ரேட்டுக்களும் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தேன் வெள்ளை சர்க்கரையை விட குறைந்தளவு கிளைசெமிக் மதிப்பைக் கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடைகளில் வாங்கும் தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இதனால் சர்க்கரைக்கு பதிலாக நாம் தேனை ஒரு குறிப்பிட்ட அளவு எடுத்து கொள்ளலாம்.