செவ்வாழையுடன், தேன் கலந்து வெறும் 40 நாள் சாப்பிடுங்க! ஒரு குட்நியூஸ் காத்திருக்குது
இயற்கையாகவே செவ்வாழைப்பழம் பல நன்மைகளைத் தரக்கூடியது. இது ஆண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்மை குறைபாட்டை போக்க அருமருந்தாக செயல்படுகிறது.
செவ்வாழையின் சத்துக்கள்
இன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை நாம் உட்கொள்வது அவசியம். அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது செவ்வாழை.
பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த பழம் இது. வாழைப்பழங்களில் அதிகளவு சத்துள்ளது செவ்வாழைதான்.
செவ்வாழையின் நன்மைகள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செவ்வாழை பழத்தை சாப்பிட்டால் நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் உள்ளது . இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளது. 50 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.
நரம்புத் தளர்ச்சியின் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவது நல்லது. 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் ஆண்மை தன்மை சீரடையும்.
இரத்த மண்டலத்தில் ஆண்மைக்கான ஊட்டச்சத்திற்கு தேவையான வேதிப்பொருட்களை செவ்வாழைப்பழம் தருவதால் ஆண்மை ஊக்கியாக செயல்படுகிறது.
மேலும் குழந்தை இல்லாத தம்பதியினர் 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழைப்பழத்தை அரை டீஸ்பூன் தேனுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
21 நாட்களுக்கு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வர பல் வலி, பல்லசைவு , ஈறுகள் பலமடையும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் மூல நோய்க்கு மிகச்சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.
செவ்வாழை சாப்பிடுவதற்கு உகந்த நேரம்
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம்.
உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும். செவ்வாழையில் இருக்கிற பொட்டாஷியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.
[AX86V
ஒரு நாளின் முதல் உணவு
காலையில் முதல் உணவாக ஒரு செவ்வாழைப்பழத்தை உமிழ்நீருடன் கூழாக மென்று சாப்பிட்டால் ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளில் 60 சதவிகிதம் கிடைத்துவிடும்.
அதன்பிறகு நாம் சாப்பிடுகிற உணவு, சத்தில் குறை இருந்தாலும் உடல் சமாளித்துவிடும். காலையில், முதல் உணவாக செவ்வாழையைச் சாப்பிட்டால் அதிலிருக்கிற மொத்த சத்தையும் உடல் கிரகித்துக்கொள்ளும்.
சூரியன் உதித்த நேரத்தில் இருந்து 7 மணி நேரம் வரை முழு செரிமானம் நடக்கும். அதன் பிறகு செரிமானம் நடைபெறுவது குறைந்துவிடும். அதனால்தான், காலையில் முதல் உணவாக செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது என்று கூறுகின்றனர்.
செவ்வாழைப்பழ அப்பம்
100 கிராம் வெல்லத்தை இடித்து, அரை கப் தண்ணீரில் போட்டு, அடுப்பில் வையுங்கள். வெல்லம் நன்கு கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளுங்கள்.
இதனுடன் ஒரு கப் கோதுமை மாவு, ஒரு செவ்வாழைப்பழம், ஒரு சிட்டிகை ஏலத்தூள், ஒரு சிட்டிகை உப்புத்தூள் போட்டுப் பிசையுங்கள்.
வாணலியில் நெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு அப்பங்களாகக் கிள்ளிப் போட்டு இருபுறமும் சிவக்க விடுங்கள்.