முக அழகை இரட்டிப்பாக்கும் உளுந்தம் பருப்பு: எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?
பொதுவாக பெண்களுக்கு அழகாக இருப்பது மிகவும் பிடிக்கும். அவர்களின் அழகை பேணுவதற்காக சருமத்திற்கு பல விஷயங்களை செய்கின்றனர்.
அன்றாட சரும பராமரிப்பு என்பது வழக்கத்தின் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. ஆனால் அதன் பலன்களை அதிகப்படுத்தவும், பக்க விளைவுகளை தடுக்கவும் அதனை சரியான முறையில் செய்வது அவசியம்.
அந்த வகையில் பெண்கள் அதிகளவில் முகத்திற்கு ஃபேஸ் பேக் பயன்படுத்துகின்றனர். அவ்வாறான ஃபேஸ் பேக்கை ஈஸியாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஃபேஸ் பேக்
1. கொஞ்சமாக மஞ்சள், உளுந்தம் பருப்பு மற்றும் தயிர் எடுத்து இதை எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும். கலக்கிய பின் முகத்தில் தடவவும்.
இதை 30 முதல் 40 விநாடிகள் மசாஜ் செய்து, தண்ணீரில் கழுவ வேண்டும். மஞ்சள் சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகளை கொண்டது.
இதனால் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்க உதவுகிறது.
2. ஒரு ஸ்ராபரியை மசித்து அதில் கொஞ்சமாக தயிர் சேர்த்து நன்றாக கலக்கி அதை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
இதை 15 நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இதனால் முகம் கரும்புள்ளி பிரச்சனைகளில் இருந்து விடுபெறலாம்.