வெந்நீரில் முகம் கழுவும் பழக்கம் உடையவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
பொதுவாகவே சரும பராமரிப்பில் முகத்தை பராமரிப்பது முக்கிய இடம் வகிக்கின்றது. அழகுசாதன பொருட்களும் பெரும்பாலும் முக பராமரிப்பை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது.
நாம் அனைவருமே உடலில் ஏனைய பாகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட சற்று அதிகமாகவே முகத்துக்கு கொடுக்கின்றோம்.
அந்த வகையில் முகத்தை கழுவும் போது, தண்ணீரின் வெப்பநிலை முகத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.
பொதுவாக ஏனைய பாகங்களை விட முகச் சருமம் மிகவும் மென்மையானதாக காணப்படும். அதனால் தண்ணீரன் வெப்பநிலை முக சருமத்தில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும்.
முகத்தை சூடான தண்ணீரில் கழுவ வேண்டுமா? அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டுமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும். அந்த வகையில் சூடான தண்ணீரில் முகம் கழுவுவதால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதக விளைவுகள்
அதிக சூடான நீரில் முகத்தை கழுவினால், சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை முற்றாக நீக்குகின்றது. அதனால் சருமத்துக்கு போதியளவு எண்ணெய் தன்மை இல்லாமல் சருமம் வறட்சியாக மாறும். மேலும் இலகுவில் சருமம் சுருங்குவதற்கு இது காரணமாக அமைகின்றது.
சூடான நீர் சருமத்தின் pH அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. சருமம் மிகவும் சென்சிடிவானதாக இருந்தால், வெந்நீரில் முகம் கழுவுவதை தவிர்த்துக்கொள்வது அவசியம். அது முக தசைகளில் காயங்களையும் ஏற்படுத்தக்கூடும்.
வெந்நீரில் கழுவினால், சருமம் சிவந்து காணப்படுதல் அல்லது சிவப்பு அடையாளங்கள் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
பொதுவாக பாக்டீரியாக்கள் மிதமான சூட்டில அதிகம் வளரும் இது முகப்பருக்கள் மற்றும் சில வகை சருமப்பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியது. சூடான நீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் மற்றும் ஈரப்பதத்தை நீக்கி விடுகிறது.
எப்போதும், முகத்தை கழுவுவதற்கு குளிர்ந்த நீரை பயன்படுத்துவது சிறந்தது. இதனால் சருமத்தை நன்றாக பராமரிப்பது மட்டுமன்றி, சீக்கிரம் சுருக்கம் விழாமலும் தடுக்க முடியும். என்றும் இளமையாக இருக்க விரும்பினால் சூடான தண்ணீரில் முகம் கழுவுவதை முற்றாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |