நாள்பட்ட மூக்கடைப்பு இருக்கா? அப்போ இந்த தைலம் இரண்டு சொட்டு விடுங்க!
பொதுவாக பருவ கால மாற்றங்கள் ஏற்படும் பொழுது நம்மிள் பலருக்கும் வரும் பிரச்சினைகளில் ஒன்று தான் மூக்கடைப்பு.
மூக்கடைப்பு பெரியவர்களை விட சிறியவர்களுக்கே அதிகமான அவஸ்தையை கொடுக்கும்.
இதனை மருந்து மாத்திரைகளால் சரிச் செய்வதை விட சூடான நீராவி, சூடான திரவங்கள் மூலிகை தேநீர், சூப், தேன் கலந்த பானம், உப்புநீர் ஸ்ப்ரேக்கள், மற்றும் மூக்கடைப்பு கீற்றுகள் போன்ற வீட்டு வைத்தியங்களால் நிரந்தரமாக குணமாக்க முடியும்.
மூக்கடைப்பு பிரச்சினையானது மூக்கில் உள்ள சவ்வுப்பகுதி வீங்குவதால் அல்லது எரிச்சலடைவதால் ஏற்படுகிறது. மூக்கில் உள்ளே இருக்கும் இரத்த நாளங்கள் வீக்கம் அடையும் பொழுது மூக்கடைப்பு பெரும் பிரச்சினையாக மாறுகிறது.
அலர்ஜி, சைனஸ், தூசிகள், ஆஸ்துமா போன்ற காரணங்களால் மூக்கடைப்பு பிரச்சினை வரலாம்.
இவற்றை தவிர்த்து சளியால் உண்டாகவும் வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் பல கஷ்டங்களுக்கு முகங் கொடுப்பார்கள். மூச்சு எடுப்பதில் கூட சிரமங்கள் ஏற்படலாம்.
அந்த வகையில், மூக்கடைப்பு பிரச்சினை நாளாக நாளாக மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றால் வீட்டு வைத்தியங்களில் அதிகமானவர்களால் தேடப்படும் கருஞ்சீரகத்தை கொண்டு தைலம் செய்து பயன்படுத்தலாம்.

அப்படியாயின், கருஞ்சீரக தைலம் எப்படி தயாரிக்கலாம்? அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சுத்தமான தேங்காய் எண்ணெய்- 50 மில்லி அளவு
- கருஞ்சீரகப்பொடி - 1 டீஸ்பூன் அளவு
செய்முறை
வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் அல்லாமல் சுத்தமான எண்ணெய் எடுத்து அதில், லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்த கருஞ்சீரக பொடியை கலக்கவும்.

சூடு கொஞ்சம் இறங்கியவுடன் சுத்தமான கார்ட்டன் துணியை பயன்படுத்தி எண்ணெய்யை மாத்திரம் தனியாக வடிக்கட்டி இறக்கவும். இந்த எண்ணெய்யை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
நாள்ப்பட்ட மூக்கடைப்பு பிரச்சினை இருக்கும் சமயத்தில் மூக்கில் இரண்டு சொட்டு மட்டும் விட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இரண்டு வேளை மூக்கில் விட்டால் மூக்கடைப்பு பிரச்சினைக்கு நிவாரணம் கிடைக்கும்.

சிலருக்கு மூக்கடைப்பு பிரச்சினையின் போது குறட்டை வரவும் வாய்ப்பு உள்ளது, அதற்கு இந்த கருஞ்சீரக எண்ணெய் நிவாரணம் கொடுக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |