உலகிலேயே மிகவும் மலிவான ஹோட்டல் இதுதானாம்! வெறும் ரூ.20 போதும்
தற்காலத்தில் மிகவும் எளிமையான ஹோட்டல் அறைகள் கூட பயணிகளின் பட்ஜெட்டைக்குள் அடங்காத வகையில் ஒரு நாளுக்கான வாடகையை அதிகரித்துவிட்டது.
ஆனால், ஒரு டீ குடிக்க தேவையான பணத்தை விடவும் குறைந்த விலையில், ஒரு ஹோட்டல் அறையில் இரவை கழிக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

எங்கு அமைந்துள்ளது?
ஆம் பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் உள்ள இந்த ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு பாகிஸ்தான் மதிப்பில் வெறும் 70 ரூபாய் ஆகும்.
அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 ரூபாய் மட்டுமே செலாவாகிறதாம் அதனால் உலகின் மலிவான ஹோட்டல் என்று இந்த ஹோட்டல் அறியப்படுகின்றது.

பழைய பெஷாவர் பகுதியில் அமைந்துள்ள குறித்த ஹோட்டலானது ஒரு காலத்தில் பட்டுப்பாதையில் பயணித்த வணிகர்கள் தங்கியிருந்த வரலாற்று சிறப்புமிக்க விடுதியான காரவன்செராய் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.
இந்த ஹோட்டலின் சிறப்புகள் பற்றி கூற வேண்டும் என்றால், இங்கு எந்த அறைகளும் கிடையாது. ஏசி கிடையாது. சுவர் அலங்காரங்கள் எதுவும் கிடையாது இங்கு வரும் விருந்தினர்கள் கட்டடத்தின் கூரையில், திறந்தவெளியில் பாரம்பரியமாக நெய்த பாய்களில் தான் தூங்கு வேண்டுமாம்.

இங்கு தேனீரும் இலவசமாக வழங்கப்படுகின்றதாம். இது குறித்து பயண வலைப்பதிவர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து, இந்த ஹோட்டல் இணையவாசிகன் மத்தியில் படு வைரலாகி வருகின்றது.
தி டிராவல் ஃப்யூஜிடிவ் என்று ஆன்லைனில் அழைக்கப்படும் பிரிட்டிஷ் பயண வலைப்பதிவர் டேவிட் சிம்ப்சன், சமீபத்தில் அங்கு தங்கியிருக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அவர் அந்த அனுபவத்தை "நம்பமுடியாத அனுபவம்" என்று விவரித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், "நான் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருக்கிறேன், ஆனால் இங்கு நான் உணர்ந்த அரவணைப்பு ஒப்பிடமுடியாதது" என குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவு சமூக ஊடக தளங்களில் வைரலாகி, மில்லியன் கணக்கான பார்வைகளை ஈர்த்தது வருவதுடன் குறித்த ஹோட்டல் மீதான அர்வத்தையும் தூண்டி வருகின்றது.
அதனால் பாகிஸ்தானில் அமைந்துள்ள இந்த சிறிய ஹோட்டல் உலகின் ஒட்டுமொத்த கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |