2 ஸ்பூன் பச்சை பால் போதும்.. வறண்டு போன முகம் பளிச்சுனு ஜொலிக்கும்
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முக அழகில் கவனம் கொள்வது அதிகம். ஏனெனின் சமூக வலைத்தளங்களின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக இந்த மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதனை சாக்காக வைத்து பிரபலமான முக பராமரிப்பு பொருட்களை தினம் தினம் அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனாலும் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே இந்த பொருட்களினால் தற்காலிக பலன்கள் கிடைக்கின்றன.
நிரந்தரமாக நமது உடலையும் முகத்தை அழகாக பராமரிக்க நினைத்தால் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு முயற்சிக்கலாம்.
அழகு சிகிச்சைகளினால் கிடைக்கும் அதே பொலிவு சாதாரணமாக நமது சமையலறையில் கிடைக்கும் பொருட்களிலும் பெறலாம். ஒரு பைசா கூட செலவு இல்லாமல் முகத்தை பால் போன்று பொலிவாக்கலாம். அதற்கு முக்கியமாக பால் தேவை.

அந்த வகையில், பச்சை பாலை வைத்து எப்படி உங்கள் முகத்தை அழகாக்கிக் கொள்ளலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
பச்சைப் பால்
எமது முன்னோர்களுக்கு கூட பச்சை பாலினால் கிடைக்கும் சரும பராமரிப்புகள் பற்றி தெரியும். அந்தளவு பிரபலமாக இருக்கும் பச்சை பாலைக் கொண்டு சருமத்தை பொலிவாக மாற்றலாம். ஏனெனின் சாதாரணமாக பார்க்கும் பச்சைப் பாலில் நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் ஆற்றல் உள்ளது.

லாக்டிக் அமிலம் எனப்படும் அமிலம் இறந்த சரும செல்களை நீக்கி விடுகிறது. அத்துடன் பாலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்துக்கு தீங்கு செய்யும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராட்டம் நடத்தில் வைட்டமின் ஏயை பாதுகாத்து வைத்திருக்கும். இளமையாகவே இருக்க நினைப்பவர்கள் இந்த வைத்தியம் செய்யலாம்.

பச்சைப் பாலை முகத்தில் தடவி வந்தால் சருமம் பார்ப்பதற்கு ஈரப்பளிப்பாகவே இருக்கும். மென்மையான, ஆரோக்கியமான சருமம் பெற வேண்டும் என முயற்சி செய்பவர்கள் இந்த பச்சை பால் வைத்தியம் செய்யலாம். தொடர்ந்து பச்சை பாலை முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள வீக்கம் குறையும்.
கறைகள் மற்றும் டானிங்கை போக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. பாலில் உள்ள வைட்டமின் ஏ, வயதான தோற்றத்தை இல்லாமல் செய்து, இளமையை நிலைக்க வைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |