ஒரு மாதம் மட்டும் டிரை பண்ணுங்க.. ரத்த அழுத்தம் மருந்து இல்லாமல் குறையும்
நாள்ப்பட்ட நோய்களில் ஒன்று தான் ரத்த அழுத்தம். இந்த பிரச்சினை இரத்த நாளங்களுக்குள் இரத்தத்தால் செலுத்தப்படும் அழுத்தம் குறையும் பொழுது உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) ஏற்படுகிறது.
அதே போன்று அதிகமாக இருந்தால் குறைந்த இரத்த அழுத்தம் (Low Blood Pressure) நோய் ஏற்படுகிறது. இரண்டில் உயர் இரத்த அழுத்தம் என்பது பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல் வரும் நோய்களில் ஒன்று.
இது உடல்நல பிரச்சினைகள் மூலம் வெளியில் தெரிய வரும். இரத்த நாளங்களின் சுவர்களில் அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது உங்களை அறியாமல் சில அறிகுறிகள் தெரியவரும்.
இதனை நீங்கள் சாதாரணமாக எடுக்காமல் மருத்துவரிடம் ஆலோசனை எடுப்பது சிறந்தது. ரத்த அழுத்தம் பிரச்சினையை கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு நாள்கள் செல்லும் பொழுது இதய நோய், சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் கூட வர வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில்,ரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் இயற்கையாகவே நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் இயற்கை மருத்துவங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
ரத்தம் அழுத்தம் குறையும்!
1. பொட்டாசியம் நிறைந்த இலைக் கீரைகள் அதிகமாக சாப்பிடும் பொழுது உங்களுக்கு ரத்த அழுத்தங்களின் தாக்கம் குறைவாக இருக்கும். நாள்ப்பட்ட ரத்த அழுத்தம் பிரச்சினை என்றால் பகல் வேளைகளில் கீரையுடன் சாப்பிடுங்கள். இது உங்களுக்கு உள்ள நோய்களின் தீர்வாக இருக்கும்.
2. நம்மிள் பலருக்கு பூண்டு என்றாலே பிடிக்காது. ஆனால் அதில் ஏகப்பட்ட மருத்துவ பலன்கள் உள்ளன. பூண்டில் உள்ள அல்லிசின் ரத்தக் குழாய்களைத் தளர்த்தி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். மற்றவர்களுக்கு சாப்பிடமால் இருந்தால் கூட பரவாயில்லை. ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் பூண்டு கொஞ்சம் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம்.

3. காய்கறிகளில் கவரும் நிறத்தில் இருக்கம் பீட்ரூட் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். குழந்தைகள் கூட நிறத்திற்காக பீட்ரூட் சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக ரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் பயம் இல்லாமல் சாப்பிடலாம்.ஏனெனின் இதிலுள்ள ஆரோக்கிய பலன்கள் உங்களுக்கு தேவையான சத்துக்களை வழங்கி உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |