பெண்களே உஷார்! திருமணத்தை மீறிய உறவில் இருப்பவர்களை கண்டுபிடிப்பது எப்படி?
பொதுவாக எமது சமூகத்தில் திருமணத்தை ஒரு புனிதமான உறவாக பார்ப்பது தற்போது குறைந்து வருகிறது. அவர்வர்கள் இஷ்டத்திற்கு திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அதன் பின்னர் இருவருக்கும் பிடிக்கவில்லை என பிரிந்து விடுகிறார்கள். இதனால் அவர்களின் குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் சிலர் இது போன்று விவாகரத்து செய்வதால் அவர்களின் ரசிகர்கள் கூட இந்த நிலைக்கு ஆளாகுகிறார்கள்.
சமூகத்தை சீரழிக்கும் பழக்கங்கள் எமது சமூகத்தில் அதிகமாக வருகிறது. காதலிகளாக இருந்தாலும், மனைவிகளாக இருந்தாலும் சரி உங்களுடைய கணவர்மார்களை நீங்களே கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இது போன்ற யூடியூப்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அடித்து கொள்வதை தினம் தினம் பார்க்கக் கூடியதாக உள்ளது.

அந்த வகையில், உங்கள் வீடுகளில் உள்ள ஆண்கள் இது போன்ற பழக்கங்கள் இருந்தால் அதனை எப்படி இலகுவாக கண்டுபிடிக்கலாம் என்பதை பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
கள்ளத்தனமானவர்களை கண்டுபிடிக்கணுமா?
1. வேலையில் அழுத்தம் அதிகமாக இருப்பது போன்று காட்டிக் கொள்வது ஆண்களுக்கு மிக இலகுவான வழியாகும். அப்போது தான் காதலி/மனைவியிடம் நெருக்கமாக இருக்கும் நேரத்தை குறைக்கலாம். இது போன்று உங்கள் வீடுகளில் உள்ள ஆண்கள் செய்தால் அவர்கள் மீது ஒரு கண்ணை வையுங்கள்.
2. செல்போனை மறைத்து வைப்பது போன்று உங்களுக்கு தெரிந்தால் அவர்கள் இல்லாத நேரங்களில் செல்போனை எடுத்து பாருங்கள். ஏனெனின் பல ரகசியங்கள் தற்போது செல்போனில் தான் மறைத்து வைக்கப்படுகின்றன. நம்பிக்கையின் பேரில் போலியான முகத்திரையில் இருக்கும் ஆண்களின் உண்மையான முகத்தை அவர்களின் போனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

3. சில ஆண்கள் இது போன்ற உறவுகளில் இருக்கும் பொழுது அதிகமாக பொய் கூறுவார்கள். ஏனெனின் அவர்கள் அந்த உறவை மறைத்தே வைக்க வேண்டும் என நினைப்பார்கள். அத்துடன் குறித்த உறவில் இருக்கும் நபரை வெளியில் காட்டாமல் இருப்பார்கள்.
4. வழக்கமாக இருக்கும் வேலைகளை மறந்து புதுவிதமான வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். புதிய பொழுதுபோக்குகளை கற்றுக் கொண்டு, அதன்படி நடந்து கொள்வார்கள். புது நண்பர்கள் அறிமுகமாகுவார்கள். இவர்களின் நடத்தைகளில் வீட்டிலுள்ள பெண்கள் அவசியம் ஒரு கண் வைக்க வேண்டும்.

5. சில ஆண்கள் தனக்கென ஒரு குடும்பம் இல்லாதது போன்று வெளியில் காட்டிக் கொள்வார்கள். ஏனெனின் தனக்கென ஒரு குடும்பம் இருப்பது போன்று இருந்தால் அவர்களால் உறவில் நிம்மதியாக இருக்க முடியாது.
மக்களே!!
இனியும் தாமதம் வேண்டாம், உங்கள் கண் முன்னால் தவறுகள் நடக்கும் பொழுது அதனை தட்டிக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மை போன்று இன்னொருவர் இது போன்ற நடத்தைகளால் பாதிக்கப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |