ஜாய் கிரிஸ்டில்லாவிற்கு ஆதரவாக வந்த தீர்ப்பு... மாதம்பட்டி ரங்கராஜ் என்ன செய்யப்போகிறார்?
ஜாய் கிரிசில்டா அவதூறு கருத்துக்களை பரப்புகின்றார் என மாதம்பட்டியின் பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், பிரபலங்களின் திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு சமையல் செய்து வருகின்றார்.
இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவினை சமீபத்தில் திருமணம் செய்துள்ளதாக புகைப்படம் வெளியாகியது.

பின்பு ஜாய் தன்னை ஏமாற்றிவிட்டதாக ரங்கராஜ் மீது புகார் அளித்திருந்தார். இவர்களது திருமணம் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்றதாகவும், தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் கூறியிருந்தார்.
தற்போது இவருக்கு பிறந்திருக்கும் குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தை என்றும் மகளிர் ஆணையத்திலும், காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.

கிரிசில்டா மீது வழக்கு
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் ஜாய் கிரிசில்டாவின் சமூக வலைதளப்பதிவியினால் மாதம்பட்டி பாகசாலா நிறுத்திற்கு ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியிருந்தார்.
கிரிசில்டா தரப்பு வாதத்தில், பாக்சாலா நிறுவனம் குறித்து எந்த சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை என்றும், எப்பொழுது ஆர்டர் எடுத்தனர்... எப்போது ரத்தாகியது? எவ்வளவு அட்வான்ஸ் பெறப்பட்டது என எந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை... குறித்த ஆர்டர் ரத்தானதற்கும், கிரிசில்டாவிற்கும் சம்பந்தம் இல்லை என கருத்து வைக்கப்பட்டது.

வழக்கில் அனைத்து தரப்பினர் வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில், தற்போது நீதிபதி செந்தில்குமார் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |