உடம்பில் ரத்தம் குறைவாக இருக்கின்றதா? தாறுமாறாக அதிகரிக்க இதை செய்திடுங்க
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். ரத்த உற்பத்தி அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
ஹீமோகுளோபின் அளவு வெகுவாக குறைந்தால், அது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். அதன் அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும்.
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணம் ஆகும்.
உடம்பில் ரத்தத்தினை அதிகரிக்கும் உணவுகள்
முருங்கைக் கீரை, சுண்டைக்காய்
பாசிப்பயறு, எள்ளுருண்டை
மணத்தக்காளி வத்தல்
அச்சுவெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை
விதையுள்ள கருப்பு திராட்சை
நாட்டு மாதுளை, நாட்டு பேரீட்சை
கறிவேப்பிலைத் துவையல்
பீர்க்கங்காய்
பிரண்டை, முள்ளங்கி
பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்தக்களி
உளுந்து, கேழ்வரகு தோசை
பொன்னாங்கன்னி கீரை, தண்டுக் கீரை
வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப்
நெல்லிக்காய் சாறு, பழரசம்