உடம்பில் ரத்தம் மிகவும் குறைவாக இருக்கின்றதா? தாறுமாறாக அதிகரிக்க இதை செய்யுங்க
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். ரத்த உற்பத்தி அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
ஹீமோகுளோபின் அளவு வெகுவாக குறைந்தால், அது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். அதன் அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும்.
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணம் ஆகும்.
சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும்.
ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டியவை
பேரீட்சை பழம் - தினமும் நான்கு
முருங்கைக் கீரை - வாரம் இரண்டு முறை, சூப் தினமும் அருந்தலாம்.
பீட்ரூட் ஜுஸ் - தினமும் 100 ml
சுண்டைக்காய் - வாரம் இரண்டு முறை
முளைக்கட்டிய சுண்டல் அல்லது பாசிபயிறு - வாரம் இரண்டு முறை
கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை - தினமும்
மாதுளை, திராட்சை - வாரம் இரண்டு முறை
ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை - தினமும் 4 எடுத்துக் கொள்ளவும்.
பீர்க்கங்காய் - வாரம் இரண்டு முறை
நெல்லிக்காய் - தினமும் ஒன்று எடுத்துக் கொள்ளவும்.
அசைவம்
அசைவம் விரும்புபவர்கள் ஆட்டு ஈரல், சுவரொட்டி இவற்றினை எடுத்துக்கொள்ளவும்.