இளம் பெண்களையும் தாக்கும் மாரடைப்பு - தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
இன்றைய நவீன காலகட்டத்தில் இளம் வயதினர்களுக்கும் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. இதய நோய்கள் பொதுவாக வயதானவர்களை தான் தாக்கும் ஆனால் இன்றைய தலைமுறையில் இளைஞர்களையே அதிகம் தாக்குகிறது.
பெண்களுக்கும் தாக்கும் மாரடைப்பு மன அழுத்தம், தூக்கமின்மை, வீட்டில் உள்ள சச்சரவுகள், அலுவலக ரீதியான அழுத்தம், அதிகப்படியான பயம் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாரடைப்பு வராமல் காப்பாற்றி வரும். மாதவிடாய் நின்ற பிறகு, ஆண்களுக்கு நிகராக மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறுகின்றனர்.
எனவே இதில் சர்க்கரை நோயுடன் இருக்கும் ஆண் ஒருவருக்கும், சர்க்கரை நோய் இல்லாமல் மாதவிடாய் நின்ற பெண் ஒருவருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு சமமாக உள்ளது.
ஆண்களை விட பெண்க ளின் இதய ரத்தக்குழாய் சிறியதாக இருக்கும். ரத் தக் குழாயில் கொழுப்பு அடைத்துக்கொள்வதும் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணம்.
மேலும், ரத்தக் குழாயின் உட்சுவரில் ஏற்படும் வெடிப்பு காரணமாகவும் மாரடைப்பு ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி பெண்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்பதால், அதிகப்படியான சந் தோஷம், அதிகப்படியான துக்கம் ஆகியவற்றை தாங்கிக் கொள்ள முடியா மல் போகும்போதும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிலர் உயிரிழக்கின்றனர்.

goodhousekeeping
தவிர்க்க என்ன செய்யவேண்டும்?
மாரடைப்பை தடுக்க உணவுப்பழக்கம், சரியான உடற்பயிற்சி, மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, கொழுப்பு, சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதை குறைப்பது ஆகியவை மாரடைப்பு வராமல் தவிர்க்கும் வழிமுறைகள் ஆகும்.
அதுமட்டுமின்றி உடல் பருமனாக இருப்பவர்கள் மற்றும் தாய், தந்தைக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலோ, 30 வயதுக்கு மேல் கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை, இசிஜி பரிசோதனை ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்வது நல்லது.