பிரபல நடிகரை பிரேக் அப் செய்தாரா நடிகை அனுபமா? வெளியிட்ட பதிவால் குழப்பம்
நடிகை அனுபமா தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவினால் நடிகர் ஒருவரிடமிருந்து பிரேக் அப் ஆகியுள்ளதாக சிலர் கூறிவருகின்றார்.
நடிகை அனுபமா
தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவரான அனுபமா, பிரபல நடிகருடன் பழகி வருவதாக கூறப்பட்டது. மலையாள நடிகையான இவர், பிரேமம் படத்தின் மூலமாக அறிமுகமானார்.
இவர் பிரபல நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாக கூறப்பட்டது. குறித்த நடிகரும் இவரும் படத்தில் சேர்ந்து நடித்தது முதல் காதலிப்பதாக கூறப்பட்டு வருகின்றது.

ரசிகர்கள் என்னதான் பல கேள்விகளை எழுப்பினாலும் தங்களுக்குள் இருக்கும் உறவினைக் குறித்து வெளிப்படையாக கூறியது இல்லை.
சில மாதங்கள் இவ்வாறு கடந்த நிலையில் தற்போது அனுபமாவின் சமீபத்திய பதிவு மற்றும் கேப்ஷன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவர் போட்டுள்ள ரீல் ஒன்றில், பூவுடன் இருப்பது, அலைகளுடன் விளையாடு, ஊஞ்சல் ஆடுவது என்று பல தருணங்களை போட்டிருந்தார்.
இதற்கு அவர் பதிவிட்டிருந்த கேப்ஷன், சில சமயங்களில், நிம்மதியை அடைய பயனற்ற பாதைகளைக் கைவிட வேண்டியிருக்கும். இன்று, அந்த நிம்மதி என்னைத் தேடி வந்துள்ளது. இன்றிலிருந்து, என் குரலை நானே தேர்ந்தெடுக்கிறேன். என் வாழ்க்கையை நானே தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்று கூறப்படுகிறது.

நடிகரை பிரிந்துவிட்டாரா?
மேலும், மிக நீண்ட காலமாக நான் சொல்ல விரும்பிய விடயம் இருக்கின்றது என்றாலும், ஆனால் அதனை கூறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தனக்கு துணையாக நின்றதற்கும், தன் மீது நம்பிக்கை வைத்ததற்கும், என் வாழ்க்கையை மிக அன்பால் நிரப்பியதற்கும் நன்றி... தனக்கு தேவைப்பட்ட தருணத்தில் செய்தியும், பிரார்த்தனையும் அன்பான செயலும் தன்னை வந்தடைந்தது. தன்னை மீண்டும் தனக்கே அனுப்பிய பிரபஞ்சத்திற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் புகைப்படத்தினையும் பதிவிட்டு சில வார்த்தைகளை கூறியுள்ள நிலையில், இதனை அவதானித்த ரசிகர்கள் பிரேக் அப் உண்மையாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |