வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை 4 ராசிக்கு அதிர்ஷ்டம்
வக்ரமடையும் சனி பகவானால் டிசம்பர் வரை எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தினை பெறுவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வக்ரமடையும் சனி பகவான்
ஜோதிடத்தில் சனி பகவானின் ஒவ்வொரு செயல்களுக்கு ஏற்ற பலன்களை தரக்கூடியதாகும். சனி பகவான் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை ராசியினை மாற்றுகின்றார்.
அதுமட்டுமின்றி அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிப்பார். சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அனைத்து ராசியினரின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படும்.
தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வரும் நிலையில், வரும் 27ம் தேதி முதல் வக்ர நிலையில் பயணிக்க உள்ளார். இவை டிசம்பர் 11ம் தேதி வரை இருந்து, பின்பு வக்ர நிவர்ந்தி அடைந்து நேர்கதியில் பயணிப்பார்.
தற்போது 12 ராசிகளில் டிசம்பர் வரை எந்தெந்த ராசியினர் நன்மையடிவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசியினரின் 12வது வீட்டில் சனி பகவான் வக்ரமடையும் நிலையில், பணியிடத்தில் இதுவரை இருந்த தடைகள் நீங்குகின்றது.
அலுவலக சூழல் சிறப்பாக இருப்பதுடன், இக்காலத்தில் ஒரு புதையல் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். சனியின் அருளால் தொழில் ரீதியாகவும் நல்ல பலனை பெற முடியும்.

சிம்மம்
சிம்ம ராசியினரின் 8வது வீட்டில் சனி பகவான் வக்ரமடையும் நிலையில், பொருளாதார வசதி, ஆடம்பரம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும்.
நீண்டு நாட்களாக இருந்த நோயிலிருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வருவதுடன், எதிர்பாராத மாற்றத்தினை காணலாம். நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்பும் தேடி வருமாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் 5வது வீட்டில் சனி பகவான் வக்ரமடையும் நிலையில், நிதி ரீதியாக சிறப்பான பலனை பெறலாம். நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதுடன், புதிய தொழில் தொடங்கவும் செய்வீர்கள்.
வியாபாரிகளுக்கு இரட்டிப்பான லாபம் கிடைப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசியினரின் 4வது வீட்டில் சனிபகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதுடன், குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்குகின்றது.
பணியிடத்தில் ஒவ்வொரு விடயமும் உங்களுக்கு சாதகமாக இருப்பதுடன், குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். வீட்டில் நல்ல சூழல் நிலவும். நீண்ட காலம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தியையும் பெறுவீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |