யாருக்கெல்லாம் பால் பணியாரம் சாப்பிட பிடிக்கும்?ரெசிபி இதோ இருக்கே!
நாம் என்ன தான் மூன்று வேளை சாப்பிட்டாலும் மாலை நேரங்களில் ஏதாவது ஒரு சிற்றுண்டி சாப்பிட பழக்கப்பட்டிருப்போம்.
இதற்காக கடைகளில் அதிகமான உணவை வாங்கி அதை ஆரோக்கியமில்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். அதுவே எமது பாட்டி அம்மாக்களின் கைப்பக்குவத்தால் செய்து கொடுக்கும் உணவிற்கு எவ்வளவு விலை கொடுத்தாலும் போதாது.
அந்த வகையில் நாம் பழங்காலத்தில் எமது முன்னோர்களின் ரெசிபியான பால் பணியாரம். இது சுவை பிரமாதமாக இருக்கும். ஆனால் தற்காலத்தில் இது பெரும்பாலும் கடைகளில் விற்கப்டுவதில்லை. இப்படி பட்ட ஒரு சுவையான உணவை பெ்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெிளிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஒரு கப் கோதுமை மாவு
- கால் கப் ரவை
- கால் கப் பொடித்த சர்க்கரை
- கால் டேபிள் ஸ்பூன் உப்பு
- கால் டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள்
- ஒரு கிளாஸ் தண்ணீர்
- ஒரு சிட்டிகை சோடா
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய்
- ஐந்து முந்திரி
- ஐந்து பாதாம்
- இரண்டு ஏலக்காய்
- சிறிதளவு தண்ணீர்
- அரை லிட்டர் காய்ச்சிய பால்
- கால் கப் சர்க்கரை
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் ரவை, பொடித்த சர்க்கரை, கோதுமை மாவு, ஏலக்காய் தூள் உப்பு ஆகியவற்றை போட்டு கிளறி பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அளவான போண்டா மாவு பதத்தில் பிசைந்து எடுக்க வேண்டும்.
இதை 15 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். இதன் பின்னர் ஒரு மிக்ஸியில் பாதாம் ஏலக்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அரை லீட்டர் பால் ஊற்றி பிறகு அதில் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த முந்திரி பாதாம் விழுதை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த பாலின் அளவு பாதியாக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும். இதன் பின்னர் இதை இறக்கி வைத்துவிட்டு ஊற வைத்த மாவை எடுக்க வேண்டும். அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
இதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பணியாரங்களை பொரித்து எடுக்க வேண்டும். இதற்கு பிறகு பொரித்த சிறிய உருண்டைகளை நாம் தயார் செய்த பாலில் சேர்த்து குறைந்தது பத்து நிமிடம் ஊற வைத்தால் போதும் சுவையான ஆரோக்கியமான பால் பணியாரம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |