இனி சிக்கன் வாங்குனா இப்படி மசாலா செய்யுங்க.. சுவை அள்ளும்- பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா
பொதுவாக விடுமுறை நாட்களில் காலையில் இட்லி-கறிக்குழம்பு அல்லது பூரி-சிக்கன் மசாலா செய்து சாப்பிடுவதற்கு ஆசையாக இருக்கும்.
இப்படி சிக்கன் சமைக்கும் பொழுது வழமையாக சமைக்கும் ரெசிபியை தவிர்த்து புதுவிதமான ரெசிபியை செய்து சாப்பிட்டால் சுவை அள்ளும். அத்துடன் உங்கள் சமையலை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இனி உங்கள் வீட்டில் பூரி அல்லது சப்பாத்திக்கு சிக்கன் மசாலா தயார் செய்யும் முன்னர் பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா செய்து பாருங்கள்.
இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
அந்த வகையில், பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா எப்படி செய்து சிக்கன் குழம்பு வைப்பது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா
தேவையான பொருட்கள்
* சிக்கன் - 1 1/2 கிலோ
* எண்ணெய் - 1 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2
* தக்காளி - 3
* பச்சை மிளகாய் - 4
* மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 250 கிராம்
* வெள்ளை மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 150 மிலி
* வெண்ணெய் - 50-100 கிராம்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக கழுவி தனியாக வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தீயில் வதங்க விடவும். அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்கவும்.
சிக்கன் சேர்த்த பின்னர் அதே வாணலியில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைக்கவும்.
சரியாக 2 நிமிடங்களின் பின்னர் பச்சை மிளகாயை சேர்த்து கிளறி கொண்டே மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு, சீரகத் தூள், கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு எண்ணெயில் 4-5 நிமிடம் வரை மூடி வைக்கவும்.
சிக்கன் எண்ணெயில் நன்றாக வெந்தவுடன் அடுப்பை அனைத்து அந்த மிதமான சூட்டுடன் வைக்கவும்.
பின்னர் சிக்கினுடன் தயிரை சேர்த்து நன்கு கிளறி விட்டவும். அதனுடன் வெள்ளை மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் பிரஷ் க்ரீம்மை சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விடவும்.
கடைசியாக வெண்ணெயை சேர்த்து கிளறி, கிரேவி சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்தால் சுவையான பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா தயார்! கொத்தமல்லியைத் தூவினால் இன்னும் சுவையாகவும் வாசணையாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |