நாவூறும் சுவையில் செட்டிநாடு காளான் செய்வது எப்படி?...
செட்டிநாடு ஸ்டைலில் காளான் ரெசிபி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சைவப்பிரியர்களின் பட்டியலில் அதிகமாக தேடப்படும் உணவு காளான் ஆகும். காளானில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளது.
காளானை ஒரே மாதிரியாக சமைத்து சாப்பிடும் நபர்கள் செட்டிநாடு ஸ்டைலில் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
காளான் - 1 பாக்கெட் (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
மல்லி - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து வரமிளகாய், உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், மல்லி, மிளகு இவற்றினை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
பின்பு வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து, அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை, காளான் சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் அரைத்த மசாலா ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து வேகவிடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது கிளறிவிட்ட பின்பு தண்ணீர் நன்கு வற்றியதும், இறக்கினால் சுவையான செட்டிநாடு காளான் ரெடி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |