இந்த மூலிகை தேநீர்களை நீங்க குடிச்சா உங்களுக்கு ஒரு நோயும் வராதாம்!
பெரும்பாலான மக்கள் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி, சோம்பல் மற்றும் சோர்வால் பாதிக்கப்படுகிறார்கள்.
இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க உதவும் மூலிகைகளை உங்கள் தேநீரில் சேர்க்கலாம்.
இந்த மூலிகைகள் உங்கள் தேநீரின் சுவை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
உங்களுக்கு நன்மை பயக்கும் மூலிகை தேநீர்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

மஞ்சள்
மஞ்சள் தேநீர் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது நமது உடலின் உட்புற வலிமையை பலப்படுத்துகிறது. மஞ்சளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, மழைக்காலத்தில் ஏற்படும் பல தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இது உங்களுக்கு உதவும்.
மேலும், மஞ்சள் தேநீர் உங்கள் எடை இழப்பு திட்டத்திற்கு கூடுதல் நன்மைகளைக் கொடுக்கும்.

துளசி
மூலிகைகளின் உலகில், ஒரு பழம்பெரும் ராக்ஸ்டார் துளசி. ஒரு கப் துளசி கலந்த தேநீர் சாப்பிடுவது, நெஞ்சு அடைப்பைத் தணிக்கும். இது மூக்கின் அடைப்பை நீக்கி, தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
துளசியில் உள்ள வைட்டமின் ஏ, டி, இரும்பு, நார்ச்சத்து மற்றும் பிற கூறுகள் பாக்டீரியாவை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. கூடுதலாக, துளசி நல்ல வாய் மற்றும் பல் ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு அற்புதமான மூலிகையாகும்.

இஞ்சி
சில உணவுகள் மழைகாலங்களில் வயிற்று வலி மற்றும் அசெளகரியத்தை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக, உங்கள் தேநீரில் இஞ்சியைச் சேர்ப்பது சிறந்தது. இஞ்சி என்பது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் ஒரு மூலிகையாகும்.
இது நமது குடல் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மோஷன் சிக்னஸ் அல்லது மார்னிங் சிக்னஸ் போன்றவற்றால் ஏற்படும் குமட்டலைக் கட்டுப்படுத்தவும் இஞ்சி தேநீர் சிறந்த பானமாகும்.

செம்பருத்தி
செம்பருத்தியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் அந்தோசயனின் நிறைந்துள்ளதால், குறிப்பாக மழைகாலத்தில்,தேநீரில் சேர்க்க வேண்டிய முக்கியமான மூலப்பொருளாக உள்ளது.
செம்பருத்தி, உங்கள் உள் நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. விரும்பத்தகாத நோய் அல்லது தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.
கூடுதலாக, இது நிறைய ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது.