முள்ளங்கியை இப்படி சமைத்துப் பாருங்க: உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்கும்
முள்ளங்கியை பெரும்பாலானோர் கழித்து தான் வைப்பார்கள். இந்த முள்ளங்கியை பொதுவாக சாம்பார் செய்ய பயன்படுத்துவர்கள்.
நாம் தள்ளி வைக்கம் இந்த முள்ளங்கியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே என சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதனால் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. மேலும் இதில் நார்சத்து, பொட்டாசியம் என நிறைய சத்துக்கள் உள்ளன.
இப்படி சத்து நிறைந்த முள்ளங்கியை சாம்பார் மட்டுமல்லாமல் அதை எப்படி விதவிதமாக சமைக்கலாம் என்பதை இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
முள்ளங்கி
முள்ளங்கி பொதுவாக வெறுவயிற்றில் சாப்பிட கூடாது அப்படி சாப்பிட்டால் வயிற்றில் இருந்து வாய் வழியாக துர்நாற்றம் வரும்.
எனவே இதை சட்னி செய்தோ, துவையல் செய்தோ சாப்பிடலாம். மதிய உணவு சாப்பிடும் முன் முள்ளங்கி சாலட் செய்து உண்ணலாம்.
முள்ளங்கியின் கீரைகளை சாலட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது சிறு நீரக கோளாறுகள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களை குணப்படுத்த உதவுகின்றன.
முள்ளங்கியை பொறியலாகவோ, சாம்பராகவோ செய்து சாப்பிடலாம். இதனால் உடல் எடை குறைய உதவியாக இருக்கும். ரத்த அழுத்தம் இருப்பவர்கள் முள்ளங்கி சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்த அழுத்தம் சமமாக காணப்படும்.
சில பழங்களுடன் முள்ளங்கியை சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இந்த முள்ளங்கியில் பித்தப்பையில் உண்டாகும் கற்களை எளிதாக குணப்படுத்தும் சக்தி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |