கீல்வாதப் பிரச்சினை இருக்கவங்க வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!
பொதுவாக கீல்வாதப் பிரச்சினை இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் இது சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இன்று வரை இருந்து வருகின்றார்கள்.
வாழைப்பழங்களை ஏழை முதல் பணக்காரர்கள் வரை சாப்பிடலாம். இதன் விலையும் அனைவரும் வாங்கும் அளவில் தான் இருக்கும்.
இந்த பழம் தமிழர்கள் கொண்டாடும் முக்கனிகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. இந்த அளவு பிரபல்யமான பழத்தை கீல்வாதப் பிரச்சினை இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது என்றால் என்ன நியாயம்.
அந்த வகையில் கீல்வாதப் பிரச்சினை இருப்பவர்கள் ஏன் எடுத்து கொள்ளக் கூடாது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இதற்குள் அப்படி என்ன இருக்கின்றது?
வாழைப்பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் சரும பிரச்சினை முதல் தலைமுடி பிரச்சினை வரை சரிச் செய்கின்றது.
மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் ஒரு பெரிய வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பார்கள். எடை அதிகரிப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கின்றது.
வாழைப்பழங்களில் இயற்கையான ஃப்ரக்டோஸ் சர்க்கரை சத்து உள்ளது. இதனால் உடலினுள் யூரிக் அமில உற்பத்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
வாழைப்பழம் சாப்பிடலாமா ?
கீல்வாதம் உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற கேள்வி பதில் தேடும் முன்பு குறித்த நபர் மருந்து வில்லைகள் எடுத்து கொள்பவரா? என ஆராய வேண்டும்.
யூரிக் அமில அளவை பொருத்து நாம் சாப்பிடலாமா? வேண்டாமா? என தீர்மானிக்கலாம். மேலும் பழமாக எடுத்து கொண்டால் சிறந்தது. அதனை தவிர்த்து , ஜூஸ் மற்றும் ஸ்மூத்தி போல் எடுத்து கொள்வதனை தடுக்க வேண்டும்.
வேறென்ன பழங்கள் சாப்பிடலாம்?
ஃப்ரக்டோஸ் சத்து குறைவாக உள்ள எந்தவொரு பழமாக இருந்தாலும் கீழ்வாதம் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். அதாவது (ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |