குழந்தைகளை தாக்கும் வைட்டமின் கே1 குறைபாடு.. பாலூட்டும் தாய்மார்கள் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக வைட்டமின்கள் எனக் கூறும் போது இரண்டு வகையான வைட்டமின்கள் இருக்கின்றன.
அதாவது, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, இ, கே ஆகும். தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் வைட்டமின்கள் - பி1, பி6, பி7, பி 12 பிரிவுகள், வைட்டமின் சி ஆகும். இவை அனைத்தும் மனித உடலுக்கு அவசிமானது தான்.
தேவையான வைட்டமின்களை உடல் தேக்கி வைத்து கொண்டு தேவையில்லாதவற்றை வெளியேற்றி விடும்.
இதற்காக வைட்டமின்கள் சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது. கண்டிப்பாக தினமும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
அதே நேரம் வைட்டமின் அதிகமாகவோ குறையவோ கூடாது. அது உடல் பணிகளை பாதிக்கும்.
அந்த வகையில் வைட்டமின் கே1 உடலில் குறைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்தும்? எந்த உணவில் வைட்டமின் கே1 இருக்கின்றது? வைட்டமின் கே1 அதிகரித்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதனை பூரண விளக்கத்துடன் பார்க்கலாம்.
வைட்டமின் கே வகைகள்
பொதுவாக வைட்டமின் கே இரத்தம் உறைவு, எலும்பு ஆரோக்கியம் போன்வற்றிற்கு அவசியமாக தேவைப்படுகின்றது.
அதில், வைட்டமின் கே1 அல்லது ஃபைலோகுவினோன் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது. வைட்டமின் கே 2 அல்லது மெனக்வினோன் ஆனது விலங்குகளை அடிப்படையாக கொண்ட உணவுகளிலிருந்து பெறப்படுகின்றது.
உதாரணமாக முட்டையின் மஞ்சள் கருக்களில் உள்ளது.
வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் கே 2 இரண்டுமே இரத்த உறைவுக்கு தேவையான புரதங்களை உற்பத்தி செய்கின்றது.
அத்துடன் அதிக இரத்தப்போக்கு ஏற்படாமல் உட்புறமும் வெளிப்புறமும் தடுக்கிறது.
விளைவுகள்
1. இரத்த உறைதலுக்கு தேவையான புரதங்களை உற்பத்தி செய்ய முடியாது.
2. காயங்கள் ஏற்பட்டால் ரத்தபோக்கு அபாயத்தை அதிகரிக்கும்.
3. மருந்து வில்லைகளின் செயற்பாட்டை குறைத்து விடும்.
குறைப்பாட்டு அறிகுறிகள்
1. காயங்களின் போது அதிகமாக ரத்தம் வெளியேறுதல்
2. சிராய்ப்பு மற்றும் நகங்களில் இரத்தப்போக்கு அல்லது இரத்தக்கட்டிகள் போன்று காணப்படும்.
3. சருமம் வெளிறிப்போதல்.
4. மலம் கழிக்கும் போது இருண்ட நிறத்தில் அல்லது இரத்தம் கலந்து செல்லுதல்.
5. ஆண்களுக்கு ஆண்குறியில் இரத்தபோக்கு ஏற்படல்
6. சிறுநீரில் இரத்தம் கலந்து செல்லுதல்
7. சருமத்தில் தடிப்புகள் ஏற்படல்
8. விரைவான இதயத்துடிப்பு ( ஒரு வகை பதற்றம்)
குறைப்பாடு ஏற்பட காரணங்கள்
1. பிறந்த குழந்தை அதிகமாக வைட்டமின் கே1 குறைப்பாட்டால் பாதிக்கப்படலாம்.
2. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த குறைப்பாடு இருந்தால் அவரிகளிடமிருந்து வரும் பாலில் வைட்டமின் கே இருக்காது. இது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
வைட்டமின் கே இருக்கும் உணவுகள்
- கீரை, காலே, ப்ரக்கோலி உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள்
- தாவர எண்ணெய்கள்
- அவுரி நெல்லி மற்றும் அத்தி பழங்கள்
- சீஸ், சுண்டல்
- சோயாபீன்ஸ்
- பச்சை தேயிலை தேநீர்
தினமும் தேவையான அளவு
- ஆண்கள்- 120 மைக்ரோகிராம்
- பெண்கள் - 90 எம்.சி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |