Ethirneechal: குணசேகரன் சதியால் மருத்துவமனையில் ஜனனி... அதிர்ச்சியில் நந்தினி
எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசி சதியால் கலப்படம் செய்யப்பட்ட நெய்யை சாப்பிட்ட பெண் ஒருவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு ஜனனி அழைத்துச் சென்றுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
குணசேகரன் கொடுத்த குடைச்சல்களை தகர்த்து எரிந்து வீட்டு பெண்கள், தற்போது வெற்றிகரமாக ஹோட்டலை நடத்தி வருகின்றனர்.

தற்போது அறிவுக்கரசி வீட்டில் இருந்து கொண்டு அடுத்தடுத்து குடைச்சல் கொடுத்து வருகின்றார். பிரியாணியில் கரப்பான் பூச்சி, நெய்யில் விஷம் என கலந்து ஹோட்டலை இழுத்து மூடுவதற்கு பிளான் செய்துள்ளார்.
இந்த நெய்யை நந்தினி சமையலுக்கு பயன்படுத்த சென்ற போது, வேலை கேட்டு வந்த பெண் ஒருவர் அதனை தட்டி விடுகின்றார். பின்பு அவரே அதை சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்குதுக்கா பயன்படுத்திக்கோங்க என்று கூறினார்.
ஆனால் அதனை பயன்படுத்தாத நந்தினி அப்பெண்ணை வெளியே அனுப்பினார். குறித்த பெண் வாசல் அருகே சென்ற போது மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை அழைத்துக் கொண்டு நந்தினி மருத்துவமனைக்கு சென்றதால் அப்பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.
தற்போது குணசேகரன் நேரடியாக களத்தில் இறங்கப்போவதாக கூறும் நிலையில், நந்தினி அறிவுக்கரசியினை இனிமேலும் சும்மா விடக்கூடாது என்று ஜனனியிடம் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |