புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வைட்டமின் D5 : இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்
வைட்டமின் டி ஊட்டச்சத்தை நாம் சூரிய ஒளியின் வழியாகவே பெறுகிறோம். ஆனால் ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் சூரிய ஒளி அரிதாகவே கிடைக்கிறது. மேலும் குளிர்காலங்களில் நம்மால் அதிகமாக சூரிய ஒளியைப் பெற முடிவதில்லை.
எனவே இந்த சமயங்களில் நாம் வைட்டமின் டியை உணவின் வழியாக பெற வேண்டி உள்ளது. பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத வைட்டமின்களுள் வைட்டமின் டி சத்து முக்கிய இடம் வகிக்கின்றது.
இதன் பிரிவுகளுள் ஒன்றான வைட்டமின் டி5 புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இதனை நாம் சூரிய ஒளியின் மூலமும் ஒரு சில உணவுகளின் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.
அந்த வகையில் வைட்டமின் டியின் ஒரு பிரிவான வைட்டமின் டி5 கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி தக்கவைக்க உதவுகிறது.
எலும்பைக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானவை. மேலும், வைட்டமின் டி5 புற்றுநோய் உயிரணு வளர்ச்சியைக் குறைக்கும், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
எந்த உணவுகளில் வைட்டமின் D5 உள்ளது?
பல உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் போன்ற வைட்டமின் D உடன் செறிவூட்டப்பட்டுள்ளன.
- மீன் எண்ணெய்
- சால்மன் மீன்
- வாள்மீன்
- சூரை மீன்
- ஆரஞ்சு சாறு
- பால் மற்றும் தாவர பால்
- மத்தி மீன்கள்
- மாட்டிறைச்சி
பொதுவாக நாம் விலங்கு வழியாக கிடைக்கும் மாட்டுப் பால் மற்றும் ஆட்டுப் பால் போன்ற பால் வகைகளை பயன்படுத்துகின்றோம். ஆனால் தாவரங்களிலிருந்தும் பால் கிடைக்கிறது.
சோயா, தேங்காய், பாதாம், ஓட்ஸ் போன்றவற்றிலிருந்து நம்மால் பால் தயாரிக்க முடியும். இவ்வாறான பாலில் இருந்து வைட்டமின் டி5 வை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆரஞ்சு ஜூஸ் வைட்மின் டி5 வை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த மூலமாக காணப்படுகின்றது. பொதுவாக 250 மி.லி ஆரஞ்சு சாறில் 2.5 எம்.சி.ஜி வைட்டமின் டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
கானாங்கெளுத்தி மீன் வைட்டமின் டி யின் முதன்மை ஆதாரமாக இருக்கின்றன. ஏனெனில் அவை கல்லீரல் மற்றும் கொழுப்பு திசுக்களில் அதிகமான அளவில் வைட்டமின் டி யை சேர்த்து வைக்கின்றன.
ஒவ்வொரு 100 கிராம் கானாங்கெளுத்தி மீனிலும் 13.8 எம்.சி.ஜி வைட்டமின் டி உள்ளது. தினசரி தேவையான அளவை விட இது அதிகமான அளவாகும்.
எனவே தினசரி கானாங்கெளுத்தி மீனை உண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டியை பெற முடியும்.அதிகபட்சம் வைட்டமின் டி சத்துக்கள் முட்டையின் மஞ்சள் கருவில் காணப்பகின்றது.
வைட்டமின்-டி குறைபாட்டைச் சரிசெய்யாவிட்டால் சர்க்கரைநோய், எலும்பு அழற்சி, எலும்புப் புரை, தசை வலுவிழப்பு, தசைவலி, எலும்பு சார்ந்த நோய்கள், மூச்சுக்குழாய் மற்றும் சுவாசம் தொடர்பான தொற்றுப்பிரச்சினைகள், நுரையீரல் பிரச்சினைகள், முடக்குவாதம், எலும்பு முறிவு போன்றவை ஏற்படலாம்.
மேலும் வைட்டமின் டி வயது, பாலினம் மற்றும் சுகாதார நிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாறுபடும். இதனால் உங்களுக்கு என்ன தேவை என்பதனை சுகாதார நிபுணருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |