குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பால் அவதிப்படுகிறீர்களா? இதை ட்ரை பண்ணுங்க
குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் ஒன்று குதிகால் வெடிப்பு. குளிர் காரணமாக பலருக்கு பாதங்களில் வெடிப்பு ஏற்படும். இந்த வெடிப்புகளால், பாதங்களில் எரியும் மற்றும் வலிகள் ஏற்படும்.
இதனால் நடக்க மிகவும் சிரமமாக உள்ளது. நீண்ட நேரம் நிற்க முடியாது. இந்த விரிசல்கள் சிலருக்கு வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
இவற்றுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால், நீண்ட கால பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் இதனை ஆரம்பத்திலே சரிசெய்வது முக்கியம் இல்லாவிடில் இது பாதங்களை பாரியளவில் சேதப்படுத்தி பார்ப்பதற்கு அவலட்சணமாக மாற்றி விடும்.
நம் உடலின் முழு பாரத்தையும் தாங்குவுது பாதங்கள் தான் அவ்வாறான பாதங்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பெரும்பாலும் பாதங்கள் சுத்தமாக இல்லாததன் காரணமாகவே குதிக்கால் வெடிப்பு ஏற்படுகின்றது.
பாதங்கள் தூய்மையாக இல்லாத போது பாதங்களில் நுண்ணங்கிகள் தங்கிவிடுகின்றன. இதனால் பாதங்களில் பிளவுகள் உண்டாகி வலி ஏற்படுகிறது.
இந்த குதிக்கால் வெடிப்பை நாம் சில இயற்கை முறையினை கையாண்டு வீட்டிலேயே குணப்படுத்த முடியும்.இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டு வைத்தியம்
வெடிப்புக்கு சிறந்த தீர்வு வேப்பிலை சிறிதளவு மற்றும் கல் உப்பு அரை கப் அத்துடன் 3 தே. கரண்டி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேப்பிலையின் சத்துக்கள் அனைத்தும் நீரில் சேரும் வகையில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அந்த தண்ணீரை பாதங்கள் இரண்டும் மூழ்கும் அளவிலான ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாதங்கள் தாங்கக் கூடிய அளவில் சற்று குளிர்ந்த நீரை சேர்த்து சமன் செய்து கொண்டு ... பாதங்களை அந்த தண்ணீரில் 10 தொடக்கம் 20 நிமிடங்கள் நன்கு ஊறவைத்து பின்னர் சுத்தமான பருத்தி துணியால் பாதங்களை நன்றாக துடைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்து பாதங்களில் நன்றாக தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் குதிக்கால் வெடிப்புக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்துவர குதிக்கால் வெடிப்பு நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |