இந்த நோய்கள் இருக்கா ? அப்போ தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிடுங்க
கறிவேப்பிலையை நாம் கறியின் ஒரு சுவைக்காக பயன்படுத்துகின்றோம். இந்த கறிவேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
இதை முக்கியமாக நிரிழிவு நோயாளிகள் பயன்படுத்தலாம். மருந்தாக பயன்படும் இந்த கறிவேப்பிலையை நாம் காலையில் சாப்பிடும் போது அது நமது உடலில் என்னென்ன நம்மை தருகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கறிவேப்பிலை
இந்த கறிவேப்பிலையில் ஆண்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் இருக்கின்றன.
கறிவேப்பிலை குடல் சுகாதாரத்திற்கு மிகவும் நல்லது. காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் நமது செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும்.
இதில் உள்ள ஆல்கலாய்ட்ஸ், க்ளைகோசைட்ஸ் மற்றும் பீனாலிக் கலவைகள் இவை பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் பரவும் நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.
இதனால் இந்த இலையை தினமும் சாப்பிடுவதால் நமது உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் குறைகிறது. இது உடலில் உள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
கறிவேப்பிலை மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.
இந்த இலையை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் உணர்திறனை அதிகப்படுத்தி ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |