பீட்ரூட்டில் இருக்கும் இயற்கைச் சக்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதா?
சக்கரை நோய் அதாவது நீரழிவு நோயாளர்கள் பொதுவாக மாச்சத்து நிரம்பிய உணவுகளை உண்ணக் கூடாது.
கிழங்கு வகை உணவுகளில் மாச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் நீரழிவு நோயாளர்கள் கிழங்கு வகைகளை உண்ண கூடாதென பலரும் கூறுவதுண்டு.
அந்த வகையில் சக்கரை நோயாளர்கள் அவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தை ஒழுங்காக கடைபிடிப்பது அவசியமாகும்.
எனவே கிழங்குவகை உணவான பீட்ரூட்டை உண்ணபது சரியானதா? தவறானதா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள்
பீட்ரூட் இயற்கையாகவே சக்கரை நிறைந்த காயாகும். இந்த காயில் உள்ள சக்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
இந்த காயில் பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளர்கள் பீட்ரூட் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டது.
உணவிற்கு முன்பு பீட்ரூட் சாப்பிட்டால் அது உடலுக்ககு மிகவும் நல்லது. இது புற்று நோய் போன்ற தீராத நோய்களை ஆரம்பத்திலேயே தடுக்ககூடியது.
இந்த இயற்கை சக்கரை நிறைந்த பீட்ரூட்டை சக்கரை நோயாளிகள் பயப்படாமல் உண்ணலாம். இதன் மூலம் உடலுக்கு நன்மை கிடைக்கும். இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ஆனால் வைத்தியரின் ஆலோசனை மிகவும் முக்கியமாகும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |