Super Singer: சூப்பர் சிங்கரில் பாடி அசத்திய கோபிநாத்... நடுவர் கொடுத்த பரிசு என்ன?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கோபிநாத் பாடல் பாடி அசத்தியுள்ளதுடன், நடுவர் அவருக்கு பரிசு ஒன்றையும் கொடுத்துள்ளார்.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் சீசன் 11 தற்போது இறுதி கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது.
பல வாரங்கள் கடுமையாக நடைபெற்ற இந்த பேட்டியில் இதுவரை ஐந்து போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி இலங்கை போன்ற நாடுகளில் இருந்து கலந்து கொண்டு தங்களது குரல் திறமையினை வெளிக்காட்டி நடுவர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகின்றனது.

ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத பல திருப்பங்கள் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த வாரம் ஐந்தாவது பைனலிஸ்டாக சரண்ராஜா தேர்வு செய்யப்பட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலி, சரண்ராஜா இவர்களைத் தொடர்ந்து வைல்டு கார்டில் மீண்டும் போட்டியிட்ட தர்ஷனா ஆறாவது பைனலிஸ்டாகவும், ஆபிரகாம் ஏழாவது பைனலிஸ்டாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது செமி பைனல் சுற்று நடைபெறும் நிலையில், இதற்கு தொகுப்பாளர் கோபிநாத் வந்துள்ளார். அவர் தனது குரலில் பாடிய பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மேலும் இவர் பாடிய பாடலுக்கு நடுவர் தனது கையில் இருந்த வாட்சை கழற்றி பரிசாக கொடுத்து இன்பஅதிர்ச்சி அளித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |