அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வாகும் கிராம்பு: தினமும் சாப்பிட்டால் எத்தனை நன்மைகளா?
கிராம்பு முக்கிய சமையல் பொருளாக மட்டுமல்ல, ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவுக்கு தனி சுவை தருகிறது. கிராம்பில் என்னென்ன நன்மைகள் என்பதைப் பார்க்கலாம்.
கிராம்பின் நன்மைகள்
கிராம்பில் ஃபிளாவனாய்ட்ஸ், பினாலிக் காம்பவுண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கின்றது. இது செல்களை பாதுகாத்து உடலில் நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
கிராம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆர்த்ரைடிஸ் போன்ற நிலைமைகளை சீர்படுத்தும்.
கிராம்பு பல் வலிக்கு சிறந்த தீர்வு என்பது அனைவரும் அறிந்ததே. பல் வலிக்கும் இடத்தில் கிராம்பை வைத்து கடித்துக் கொண்டால் வலி குறையும்.
வாய்த்துர்நாற்றம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 2 கிராம்புகளை சாப்பிட்டால் வாய்த் துர்நாற்றம் நீங்கும்.
கிராம்பில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் உடலில் இருக்கும் தேவையற்ற பக்ரீரியாக்களை அழிக்கும்.
கிராம்பில் இருக்கும் வைட்டமின் சி செரிமானப் பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு கிராம்பு சிறந்த மருத்துவமாக இருக்கும் கிராம்பு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கிறது.
கிராம்பை அடிக்கடி உணவில் சேர்த்தால் நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. கிராம்பில் உள்ள யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி கல்லீரல் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நீழிரிவு நோயாளர்களிகளுக்கு கிராம்பு இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம், அவை இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன.
கிராம்புள் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |