ஒரே மாதத்தில் முடி வளர வேண்டுமா? இந்த சின்ன பொருள் இருந்தாலே போதும்
கிராம்பு என்பது உணவின் சுவை மற்றும் வாசனையை அதிகரிக்க பயன்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இவை நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றது.
ஆனால் கிராம்பு உடல் நலத்திற்கு நன்மை அளிக்கின்றது என்பதையும் தாண்டி தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை.
தலையில் அழுக்கு, பொடுகு மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும், முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க கிராம்பு உதவி செய்கின்றது. இதனை தலைமுடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
கிராம்பின் சத்துக்கள்
இரும்புச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகாகவே இருக்கின்றது.
தேவையான பொருட்கள்
கிராம்பு 10 அல்லது 12
கறிவேப்பிலை 8 அல்லது 10 கொத்து
தண்ணீர் 2 கப்
செய்முறை
கிராம்பு நீர் தயாரிக்க ஒரு பாத்திரத்தினை எடுத்துக்கொண்டு அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் கொதித்த உடன் கறிவேப்பிலை மற்றும் கிராம்பு இவற்றினை போட்டு நன்கு கொதிக்க விடவும். பின்பு அடுப்பை அணைத்துவிடடு, குளிர்விக்கவும்.
நன்கு ஆறியதும் பாத்திரம் ஒன்றில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இந்த கிராம்பு நீரை சுமார் ஒரு வாரம் ஃபிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தலைமுடி மற்றும் மயிர்க் கால்கள் இவற்றில் நன்கு தடவி மசாஜ் செய்து, பின்பு தலைக்கு குளிக்கவும்.
கிராம்பின் மருத்துவ பயன்கள்
அடர்ந்த பிரௌன் நிறம் கொண்ட கிராம்பு மற்றும் பீட்டா கரோட்டீன்கள் கொண்ட உணவுகளில் அதிக அளவில் வைட்டமின்களும் ஆனு்டி ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்திருக்கின்றன.
இவை நமது கண்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. கிராம்பு மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் வாய்ந்ததாகும்.
கிராம்பு வாய் துர்நாற்றம், பல் வலி, ஹெர்னியா, வாயுத்தொல்லை, வாந்தி, குமட்டல் மற்றும் டயேரியா போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
மேலும் முடிக்கு கிராம்பு தண்ணீர் பயன்படுத்துவது எப்பொழுதும் இளமையாகவே வைத்துக்கொள்கின்றது.