கல்லீரல் பிரச்சினை வரவே கூடாதா? அப்போ பீட்ரூட் தான் சிறந்த தெரிவு
பொதுவாக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முறையான உணவுப் பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் பீட்ரூட் ஒரு சூப்பர் உணவாகும். பீட்ரூட் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.தினசரி பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பயன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தெற்கு ஐரோப்பாதான் பீட்ரூட்டின் பூர்வீகமாக கருதப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் பீட்ரூட் தாவரத்தின் இலைகளை மாத்திரமே மனிதர்கள் உணவுக்காக எடுத்துக்கொண்டார்கள்.
காலப்போக்கில் பீட்ரூட் கிழங்கை சாப்பிடும் வழக்கம் தொடங்கியது. மனித உடலின் மிக முக்கியமான உறுப்புக்களுள் கல்லீரல் இன்றியமையாதது.இது பழுதுபட்டால் தன்னைத்தானே சரிப்படுத்திக்கொள்ளும் ஆற்றலை கொண்டுள்ளது.
கல்லீரல் ஆரோக்கியத்துக்கு பீட்ரூட் பெரிதும் துணைப்புரிகின்றது. சரும பராமரிப்பிலும் பீட்ரூட் முக்கிய பங்காற்றுகின்றது.
பீட்ரூட் கொலாஜன் உற்பத்திக்கு துணைப்புரிவதால் சருமம் என்றும் இளமையாக இருக்கும்.இதில் உள்ள பீட்டெயின் ரசாயனம் மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
பீட்ரூட் குறைவான கொழுப்புச்சத்தை கொண்டுள்ளதால் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொண்டாலும் உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாது.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் உள்ளடக்கம் நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்ய உடலுக்கு உதவுகிறது, இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது.
தினசரி பீட்ரூட் சாப்பிடுவதால் அதிகரித்த இரத்த ஓட்டத்தால் தெளிவாக சிந்திக்கும் திறனை அதிகரிக்க முடியும், இது நாள் முழுவதும் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும்.
இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பீட்ரூடில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |