சாப்பிடும் போது உங்களுக்கு இப்படியொரு நிலை வந்தால்.... இதுவும் புற்றுநோயின் ஒரு அறிகுறிதான்
பொதுவாகவே நமக்கு தற்போதெல்லாம் புது புது நோய்கள் எல்லாம் வந்த வண்ணம் தான் இருக்கிறது. அப்படி நம்மிடையே பழக்கப்பட்ட ஒரு நோய் தான் இந்த புற்றுநோய்.
இது புகைப்படித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற காரணிகளால் தான் ஏற்படும் என்று கேள்விபட்டிருப்போம். இந்த புற்றுநோய் நுரையீரல், கல்லீரல், வாய் என சில உறுப்புக்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும், தற்போது தலை மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பு ஏன் ஏற்படுகின்றது என்பது பற்றி தற்போது விளக்கமாக பார்க்கலாம்.
தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய்
தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது புகையிலை மற்றும் பான் என்பவற்றை மெல்லுவதால் தான் வாயில் புற்றுநோய் ஏற்படுகிறது என்று சொல்லப்பட்டது இந்த பாதிப்புக்களால் தான் கழுத்திலும் தலையிலும் புற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
அறிகுறிகள்
- உணவு விழுங்குவதில் சிரமம்
- தொண்டை புண்
- தொடர்ந்து இருமல்
- கழுத்தில் கட்டி ஏற்படுதல்
- பேசுவதற்கு சிரமம்
- காதுவலி
- எடை இழப்பு
சிகிச்சை
இவ்வாறு தலை மற்றும் கழுத்தில் ஏற்படும் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். இது நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை அகற்றுவது போல அகற்றப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பேச்சு திறன் மற்றும் உணவுகளை விழுங்கும் திறன் பாதிக்கப்படும். மேலும், இந்த சிகிச்சையுடன் கீமோதெரபி சிகிச்சையும் செய்யப்படும்.
எவ்வாறு தடுப்பது?
புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க முடியாது தான் அதிலும் தலை மற்றும் கழுத்தில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க முடியாது என்றாலும் குறைப்பதற்கு முயற்சிக்கலாம். இதற்கு புகையிலை மற்றும் மது பாவனை போன்றவற்றை தவிர்ப்பது முக்கியமான தடுப்பு முறையாக பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |