வேகமாக துரத்தும் புற்றுநோய்... அறிகுறிகள் எப்படியிருக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
உலக அளவில் இறப்புகளுக்கு காரணமாக வரும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இருக்கின்றது. 2020ம் ஆண்டில் 10 மில்லியனுக்கு அதிகமான நபர்கள் புற்றுநோயினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
புற்றுநோயில் பல வகைகள் உள்ள நிலையில், இந்த நோயின் தாக்கத்தை தகுந்த நேரத்தில் கண்டுபிடிப்பது தான் சவாலாகும். நாம் தாமதாக புற்றுநோய் செல்களை கண்டுபிடித்தால், அதற்கான சிகிச்சையும் தாமதமாகும்.
இதனால் சிகிச்சைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியினை புற்றுநோய் செல்கள் அடைந்துவிடுமாம். ஆதலால் சின்ன சின்ன அறிகுறிகள் கூட புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும். ஆதலால் நீங்கள் சில அறிகுறிகளை அலட்சியப்படுத்தகூடாது. அவை என்னென்ன அறிகுறிகள் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
புற்றுநோயினால் பாதிக்கப்படும் நபர்கள் சோர்வு என்பது முக்கியமான அறிகுறியாகும். நமது உடம்பில் உள்ள ஆற்றலை உறிஞ்சி நாளுக்கு நாள் சோர்வை அதிகரிக்கும். படுக்கையிலிருந்து எழுவது, ஒரு ரிவி ரிமோட்டை பயன்படுத்துவது கூட கடினமாக இருக்கும். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சோர்வு வலி, குமட்டல் வாந்தி, மனச்சோர்வு இவற்றினையும் ஏற்படுத்தும்.
உடல் எடையை திடீரென குறைந்துவிட்டால் அலட்சியம் செய்யக்கூடாது. ஆம் இவையும் புற்றுநோயின் முதல் அறிகுறியாகும்.
சருமத்தில் சில தடிப்புகள் ஏற்படுவதும் புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும். அதாவது லூகேமியா என்ற ரத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் சருமம் இவ்வாறான பிரச்சினையையும் ஏற்படுத்தும். தோலுக்கு அடியில் இருக்கும் சிறு சிறு ரத்தநாளங்கள் உடைவதால் இந்த தடிப்புகள் ஏற்படுகின்றது. ஆகையால் இந்த அறிகுறியை லேசாக எண்ணக்கூடாது.
கண்களில் கடுமையான வலி இருந்தால் இவையும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகும். இந்த அறிகுறியினை பெரும்பாலான நபர்கள் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் அந்த தவறை செய்யக்கூடாது.
அடிக்கடி தலைவலி ஏற்படுவதுடன் இது வழக்கத்திற்கு மாறாக இருக்கும். ஆரம்பத்தில் லேசாக இருந்த தலைவலி நாட்கள் செல்ல செல்ல கடுமையாக மாறும். இந்த அறிகுறி தோன்றினால் ஆரம்பத்திலேயே மருத்துவர்களை பார்க்க வேண்டும். இவை Brain Tumor-ன் அறிகுறியாகுமாம்.
மாதவிடாய் காலங்களில் அளவுக்கு அதிகமான வலி ஏற்படும். அதாவது தாங்கமுடியாத வலியை அனுபவித்தீர்கள் என்றால் உடனே மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. இது எண்டோமெட்ரியல் கேன்சருக்காக அறிகுறி என்று கூறப்படுகின்றது.
மார்பக புற்றுநோய் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு தான் அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் பெண்கள் தங்களது மார்பகத்தை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பின் முளை காம்புகள் வடிவத்தில் மாற்றம் ஏற்படும். உள்நோக்கி அல்லது பக்கவாட்டில் திரும்பி காணப்பட்டால் மார்பக புற்றுநோய் அறிகுறியாகும்.
பிறப்புறுப்பில் வீக்கம், சாப்பிடும் போது உணவை விழுங்குவதில் சிரமம், செரிமான பிரச்சினை, சுவாசிக்க சிரமம் ஏற்படுதல், வயிற்று உப்புசம், சிறுநீர் கழிக்கும் போது வலி, நகங்களில் மாற்றம், மலம் கழிப்பதில் மாற்றங்கள் இவையும் புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |