செயற்கை இனிப்பூட்டிகளால் புற்றுநோய் அபாயமா? தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக நாம் நமது கண்களுக்கு தெரியாமல் செயற்கை இனிப்பு கலந்த உணவுகளை வாங்கி உண்ணுகிறோம்.
இது காலப்போக்கில் உடலில் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
சர்க்கரைக்கு சமமான இனிப்பை தரும் இந்த செயற்கை இனிப்பூட்டியில் கலோரிகள் சுத்தமாக இல்லை.
அந்த வகையில் கடைகளில் வாங்கும் பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் குறிப்பிட்ட சில உணவுகளில் சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்துகிறார்கள்.
இதன்படி, செயற்கை இனிப்பூட்டியினால் ஏற்படும் விளைவுகளை தொடர்ந்து பார்க்கலாம்.
செயற்கை இனிப்பூட்டியினால் ஏற்படும் விளைவுகள்
1. கலோரிகளை சமாளிக்கக் கூடிய திறனை செயற்கை இனிப்பூட்டிகள் பாதிக்கின்றது. இதனால் நாம் அதிகளவான உணவுகளை எடுத்து கொள்வோம். இது உடல் எடையை அதிகரிக்கும்.
2. செயற்கை இனிப்பூட்டி கலந்த குளிர்பானங்களை எடுத்து கொண்ட பின்னர் மீண்டும் இனிப்பான பொருட்களை சாப்பிட சொல்லி எம்மை தூண்டும். இதன் காரணமாக உடலில் கலோரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
3. வயிறு உப்புசம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற ஆகிய குடல் ரீதியான பிரச்சினைகள் வரும். அதிலும் சிலருக்கு தொடர் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும். தொடர்ந்து குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் நலனும் பாதிக்கப்படும்.
4. தொடர்ச்சியாக செயற்கை இனிப்பு கலந்த உணவுகளை எடுத்து கொள்வதால் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும். அதிலும் உயர் ரத்த அழுத்தமும் உண்டாகும். இதனை மருத்துவர்கள் ஆய்வுகளினால் கண்டுபிடித்துள்ளார்கள்.
5. செயற்கை இனிப்பூட்டிகள் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றது. அத்துடன் இதர நோய் அபாயங்களையும் ஏற்படுத்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |