விவாகரத்தை உறுதி செய்த ஹன்சிகா? வைரலாகும் புதிய பதிவு
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன.
இந்நிலையில், இந்த வருடத்தில் தான் பல பாடங்கள் கற்றுக்கொண்டதாக நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு நெட்சன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
ஹன்சிகா மோத்வானி
தனுஷ் நடித்த ‛மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
அதன்பின்னர், ‛ஒரு கல் ஒரு கண்ணடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யனும் குமாரு, சேட்டை, வேலாயுதம், வாலு' என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா, 2022ம் ஆண்டு டிசம்பரில் தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தனது நெருக்கமான தோழியாக இருந்த பெண்ணின் முன்னாள் கணவரை ஹன்சிகா கரம்பிடித்ததால் இந்த விடயம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹன்சிகாவின் திருமண செய்தி வெளியானதுமே, சோஹேல் பற்றி இணையத்தில் பல செய்திகள் வெளி வந்தன. தொழிலதிபரான சோஹேல் கதூரியா, ஹன்சிகாவின் தோழியை விவாகரத்து செய்துவிட்டுத்தான், ஹன்சிகா மோத்வானிவை திருமணம் செய்து கொள்கிறார்.
சோஹேல் கதூரியாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய ஹன்சிகாதான் முக்கிய காரணம் என்றும் தகவல் வெளியானது. அது உண்மை இல்லை, இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள், அது தான் உண்மை'' என ஹன்சிகா கண்ணீர்மல்க பேசி இருந்தார்.
கணவரை பிரிந்த ஹன்சிகா?
திருமணமான சில மாதங்களிலேயே ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்றும், ஹன்சிகா, சொஹைல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆளுக்கொரு வீட்டில் வசித்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் ஹன்சிகா தனது பிறந்தநாளுக்கு இன்ஸ்டாவில் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.
இந்த வருடம் நான் கேட்காத பல பாடங்களை கற்றுக்கொண்டேன் என அவர் கூறி இருக்கிறார். விவாகரத்து பற்றி தான் அவர் இப்படி பதிவிட்டு இருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
