சாய் பல்லவியைப் போல் நீளமான முடி வேண்டுமா? அவரே கூறிய டிப்ஸ்
கூந்தல் என்று சொன்னாலே நடிகை சாய் பல்லவியைத்தான் நமக்கு சட்டென்று நினைவுக்கு வரும். ஏனென்றால் அவரது கூந்தல் அந்தளவுக்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் காணப்படுகின்றது.
ஒரு நடிகையால் எப்படி கூந்தலை இவ்வளவு நீளமாக வைத்திருக்க முடிகிறது என்பது அனைவரும் ஆச்சரியப்படும் ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் அவர் தனது கூந்தலின் அடர்த்திக்கும் நீளத்துக்கும் தான் என்ன செய்கிறார் என்பதை பகிர்ந்துள்ளார்.
image - medical news today
அதாவது, அவர் இயற்கையின் மீது அதீத நம்பிக்கை கொண்டவராம். அதனால் அவரது கூந்தலுக்கு கற்றாழையைப் பயன்படுத்துவாராம். கற்றாழை ஜெல்லானது, பொடுகைத் தடுத்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது எனவும் கூறியுள்ளார்.
சரி இனி முடிக்கான கற்றாழை பெக் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - vedix
தேவையான பொருட்கள்
கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 கப்
செய்முறை
முதல்நாள் இரவே ஒரு கப் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
அடுத்தநாள் மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும்.
இப்போது மாஸ்க் ரெடி.
பின்னர் இந்த மாஸ்க்கை உச்சந்தலையில் தடவி, முடியை சீவிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு ஷவர் கெப் கொண்டு தலையை கவர் செய்து, ஒருமணி நேரத்தின் பின்னர் கழுவிக் கொள்ளவும்.
image - healthcart
கற்றாழையினால் என்னென்ன நன்மைகள் உள்ளன?
- நீண்ட கூந்தலை பெறலாம்.
- சுருள் முடியாக இருந்தால் கற்றாழையைப் பயன்படுத்தலாம்.
- முடி உலர்வாக இருந்தாலும் கற்றாழையை பயன்படுத்தலாம்.
- முடி அதிகமாக கொட்டினாலும் கற்றாழையைப் பயன்படுத்தலாம்.
image - vogue india