கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சக்தி வாய்ந்த இலையின் சாறு? எப்படி உதவுகின்றது தெரியுமா?
பாரம்பரிய வைத்திய முறையில் தாவரங்கள் அரிய மூலிகைகளாக கருதப்பட்டு வைத்தியத்துக்கு பயன்படுத்தப்பட்டன. அதில் ஒன்று தான் பப்பாளி இலை.
பப்பாளி இலைச்சாறு டெங்கு போன்ற ஒட்டுண்ணி காய்ச்சளிக்கவும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் சிகிச்சையளிக்கவும் செய்கிறது என்பதை உணர்ந்து மக்கள் பப்பாளி இலை வைத்தியத்தை விரும்புகிறார்கள்.
பப்பாளி செடியின் மென்மையான இளம் இலைகளை நசுக்கி அதிலிருந்து பப்பாளி இலைச்சாறு தயாரிக்கப்படுகிறது.
இதை பழங்களின் சாறுடன் கலந்து குடிப்பதை காட்டிலும் தனியாக குடிப்பது தான் நல்லது.
இது சரும ஒவ்வாமை, காயங்கள், வடுக்கள், கறைகள், முடி உதிர்தல், பொடுகு மற்றும் பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சாறு உள்ளுக்கும் மேற்பூச்சுக்கும் கூட பயன்படுத்தப்படுகிறது.
இப்படி மருத்துவம் குணம் கொண்ட இந்த இலையை முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.
முடி வளர்ச்சிக்கு
- முடி பிரச்சனைகளுக்கு பப்பாளி இலையின் சாறை உச்சந்தலையில் தடவி வந்தால் அது கூந்தலில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் கசப்பை நீக்கும்.
- இது உச்சந்தலையில் உள்ள பொடுகு மற்றும் அரிப்பு சிக்கல்களை குணப்படுத்த செய்கிறது.
- பப்பாளி இலைச்சாறு உச்சந்தலையில் இருக்கும் ஈரப்பதத்தையும் எண்ணெயும் சமன் செய்கிறது.
- இதனால் கூந்தல் வறட்சி மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.
- பப்பாளி இலையின் சாறை கூந்தலில் தடவி வந்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.