பெண்களே! நேர்காணலுக்கு செல்கிறீர்களா?
மற்றவர்களை ஈர்க்க வேண்டும் என்றால், நமது தோற்றம், உடை, நடை என்பன மிகவும் முக்கியம். அதுவும் நேர்காணல்களில் இது அதிக தாக்கத்தை செலுத்துகின்றன.
பெண்கள் அணியும் உடை, அளிக்கும் தோற்றம், குறிப்பாக கூந்தல் அலங்காரம் என்பன தொழில் தரப்போகும் அதிகாரிக்கு உங்கள் மீது ஒரு நல்ல எண்ணத்தை தரும்.
நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிப்பது எந்தளவு முக்கியமோ அதேயளவு நமது கூந்தல் அலங்காரமும் மிகவும் முக்கியமானது.
முகத்துக்கு ஏற்ற அளவான மேக் - அப், அலுவலகத்துக்கு செல்லக்கூடிய கூந்தல் அலங்காரம் என்பவை மிகவும் முக்கியமாகும். சரி இனி அலுவலக தோற்றத்துக்கான கூந்தல் அலங்காரங்களைப் பார்க்கலாம்.
போனி டெயில் (குதிரை வால்)
இந்த கூந்தல் அலங்காரத்தை நேர்த்தியாக அமைத்துக் கொண்டால் மிகவும் ஏற்ற அலங்காரமாக இருக்கும். அன்டி பிரிஸ் க்ரீம், ஸ்டலிங் மூலம் இதை செய்து கொள்ளலாம்.
எவ்வாறு செய்யலாம்?
முதலாவதாக தலைமுடியை நேராக்கி முடி முழுவதிலும் அன்டி ப்ரஸ் க்ரீமை தடவிக்கொள்ள வேண்டும். பின்னர் தலைமுடியை இறுகப் பற்றி குதிரை வால் போல் விருப்பமான உயரத்தில் சுற்றி இறுக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் தலையின் கீழ்ப்பகுதியிலிருந்து சிறிதளவு முடியை எடுத்து அதை கூந்தல் அலங்காரத்தை சுற்றி அமைத்துக் கொள்ளவும்.
டிவிஸ்டட் (முன்பக்க தலைமுடி)
உடனடியாக தொழில்முறை தோற்றத்தைத் தரக்கூடிய இந்த கூந்தல் அலங்காரம் மிகவும் எளிதானது.
எவ்வாறு செய்யலாம்?
முடியின் கீழ்ப்பகுதியில் சுருள் வடிவ முடியை உருவாக்கிக் கொள்ளவும். பின்னர் சீப்பை பயன்படுத்தி முன்பக்க முடியை அமைத்துக்கொண்டு அதை பின்பக்கமாக இழுத்து கொண்டை ஊசி குத்திக் கொள்ளவும். இறுதியாக ஸ்ப்ரே கொண்டு நிறைவு செய்யவும்.
ஸ்லீக் லோ பன் (கொண்டை)
காற்றில் பறக்கும் முடியை கட்டுப்படுத்தி நவீனத் தன்மையோடு இருக்கும்.
எவ்வாறு செய்யலாம்?
தலைமுடி அனைத்தையும் ஒன்றாக்கி, கழுத்து அளவில் குதிரை வாலாக அமைத்துக்கொண்டு, பின்னர் குதிரை வாலை சுருட்டி கொண்டையாக்கி, கொண்டை ஊசி குத்திக் கொள்ளவும்.